Sunday, November 11, 2007

பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா?

பெண் குழந்தைகளை ஆண்கள் கொஞ்சும் போது, பெண்குழந்தைகள் தர்மசங்கடமாக உணர்கின்றன என்பது தெரிந்த உண்மை. தனக்கு பிடிக்காத வகையில் யாராவது தன்னைக் கொஞ்சினால் வெளியே சொல்லவே அச்சப்பட்டு, மனம் வெதும்பி, மன உளைச்சலுக்குக் குழந்தைகள் ஆளாகின்றன. இதே மனநிலையில் வழரும் போது, சில பெண்கள் ஆண்களைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரும்பாலான ஆண்கள் தங்கள் எல்லையை மீறுவதில்லை. ஒரு சிலர், 'குழந்தை தானே...' என்று நினைத்து உதட்டைக் கிள்ளுவது, கன்னத்தில் முத்தமிடுவது உட்பட பல செயல்களை அவர்களையும் அறியாமல் செய்து விடுகின்றனர். மிகச்சில ஆண்கள், எல்லையையும் மீறுகின்றனர். குழந்தை என்று தெரிந்தே எல்லை மீறிச் செயற்படுகின்றனர்.

ஆனால், இதை பெற்ற தாய் தான் உற்ற கண்ணாக இருந்து குழந்தையை எச்சரித்தபடி பார்க்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். பல குடும்பங்களில் இதைக்காணலாம். 'அந்த அங்கிள் வந்தா, கிட்டே போகாதே. சட்டை போடாமல் வெளியே போகாதே. எல்லோர் எதிரேயும் சட்டையைக் கழற்றாதே..' என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள் பார்க்கும், கேட்கும் நமக்கு ஏதோ போல் தோன்றினாலும், யதார்த்தத்தை நினைக்கும் போது அதில் எதுவும் பிழையாக தெரியாது.

மனநல மருத்துவர்களும் பெண்குழந்தைகள் மனநிலை பாதிக்காத வகையில் எப்படி நடந்து கொள்வது என்று நிறைய அறிவுரை கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த குழந்தைகள் மாநாட்டில், 'பெண்குழந்தைகளை கொஞ்சுவதில் உறவினர்களுக்கு எல்லை வகிக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை கொஞ்சும் சாட்டில் சிலர் அதாவது ஆண்கள் எல்லை மீறி விடுவதால் ஆண்கள் என்றாலே குழந்தைகள் அருவருக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால் சில குழந்தைகளின் மனநிலை பாதிப்புக்கும் உள்ளாவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மகளிர் ஆணையத்தில் ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. பெண் குழந்தை கல்வி கற்றால், அந்த குடும்பமே படித்ததற்கு சமம். ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒரு திறமை பெற்றுள்ளது. சுய சிந்தனையுடன் குழந்தைகள் உள்ளன. பெண்குழந்தைகளுக்கு கல்வி மட்டும் போதாது. தற்காப்பு கலைகளும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண் ஆசிரியர் பிரம்பால் கையில் அடித்தால் வாங்குவது வேறு. ஆனால் கையால் தொட்டால், ஆசிரியருடைய கண்களைப் பாருங்கள். அவர் கண்ணில் கோபம், இரக்கம் அல்லது காமம் என எந்த உணர்வு இருக்கிறது என்பது தெரியும். பக்கத்து வீட்டில் வசிப்போரும், உறவினர்களும் கூட பெண் குழந்தைகளை கொஞ்சுவதில் எல்லை உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை என்பது ஒவ்வொரு பெண்குழந்தைகளுக்கும் தெரியும். எனவே, பெண் குழந்தைகளுடன் நட்பு முறையில் பெற்றோர் பழகும் போது, தனக்கு நடக்கும் இது போன்ற தொந்தரவுகள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்வர். சம்பந்தப்பட்ட உறவினர்களிடமே, அளவோடு பழகுமாறு கூறி விடுவது மிக மிக நல்லது.

நன்றி: வீரகேசரி.

பின்குறிப்பு: ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை மையமாக வைத்து, குழந்தைமை ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு பெண்ணியல் நோக்கில் வேறுவிதமான பார்வைகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். பெற்றோரியல், உளவியல், உடல் நலவியல் போன்ற துறைகளின் பார்வை பெரும்பாலும் சமூக யதார்த்தக் கட்டமைப்புத் தளத்தின் மீது, அதன் பிரச்சனைப்பாடுகளை எதிர்கொள்ளும் விதமாகவே அமைந்திருக்கும். பெண்குழந்தைகள் மட்டுமல்லாது ஆண் குழந்தைகள் கூட பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர். ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது.
இவ்விடயம் சார்ந்து ஆழமான உரையாடலை இணைய சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

x-group

Thursday, November 8, 2007

உங்கள் பிள்ளைகளின் கற்றலுக்கு உதவுங்கள்

தம் குழந்தைகளின் (குறிப்பாகப் பத்து வயதுக்குட்பட்ட) கற்றலில் உதவவும் ஊக்குவிக்கவும் பெற்றோர் செய்யக்கூடியவை:

* அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்; அவர்களது பிரச்சினைகளைக் கவனத்திலெடுங்கள்.

* அவர்களுடன் சேர்ந்து வாசியுங்கள்.

* குடும்பக் கதைகளைக் கூறுங்கள்

* அவர்களது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை மட்டுப்படுத்துங்கள்

* புத்தகங்கள், இதழ்கள், நாளேடுகள் போன்றவற்றை வீட்டில் கிடைக்கச் செய்யுங்கள்.

* அவர்களுடன் சேர்ந்து அகராதியைப் பயன்படுத்துங்கள்

* கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள்

* பாடல்களையும் கவிதைகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* அவர்களை நூலகங்களுக்குக் கூட்ட்டிச் செல்லுங்கள்; நூலக அங்கத்தவராக்குங்கள்.

* சந்தர்ப்பம் கிடைக்கும் போது நூதனசாலை மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லுங்கள்.

* நாளாந்த செய்திகள் பற்றி அவர்களுடன் கதையுங்கள்

* பறவைகள், விலங்குகளையும் சூழலையும் அவர்களுடன் சேர்ந்து ஆராயுங்கள்

* அவர்கள் அமைதியாக இருந்து கற்கக் கூடிய இடமொன்றை ஏற்படுத்திக் கொடுங்கள்.

* அவர்களது வீட்டுவேலைகளை மேற்பார்வை செய்யுங்கள்

* அவர்களது ஆசிரியர்களைச் சந்தியுங்கள்

Helping Your Child Learn To Read

"Why?"

This is the question we parents are always trying to answer. It's good that children ask questions: that's the best way to learn. All children have two wonderful resources for learning--imagination and curiosity. As a parent, you can awaken your children to the joy of learning by encouraging their imagination and curiosity.

Helping Your Child Learn to Read is one in a series of booklets on different education topics intended to help you make the most of your child's natural curiosity. Teaching and learning are not mysteries that can only happen in school. They also happen when parents and children do simple things together. For instance, you and your child can: sort the socks on laundry day-sorting is a major function in math and science; cook a meal together-cooking involves not only math and science but good health as well; tell and read each other stories--storytelling is the basis for reading and writing (and a story about the past is also history); or play a game of hopscotch together playing physical games will help your child learn to count and start on a road to lifelong fitness. By doing things together, you will show that learning is fun and important. You will be encouraging your child to study, learn, and stay in school.

..............................

நன்றி:Helping Your Child Learn To Read

Wednesday, November 7, 2007

Grinding poverty stalks Jaffna’s children

By: S. Somitharan

The two checkpoints at Thandikulam, on either side of the border present a picture of intense activity. And understandable too: unless the Sri Lanka military and the LTTE are able to run their respective systems at a high degree of efficiency there will be bottlenecks on the A9.

Under the placid morning sun visitors to Jaffna, obviously coming from overseas, alight from their vehicle and stretch their limbs. Their sense of relief in getting off from the cramped interior of the van is tempered by the thought of having to undergo regimented checking that all travellers to Jaffna and the Vanni are subject, both by the army and the civilian officials under the LTTE.

Lounging under the trees that rustle in the breeze of early January, before the sun reaches the pinnacle on its journey to the west, they are assailed by an attack of thirst. Looking around they spy a little corner-shop that sells bottled water, because the supply from the tap might be contaminated with bacteria too robust for their vulnerable little stomachs used to the clinical purity of the water available in the metropolises of London, Paris, Toronto or Melbourne.

On the way to the corner-shop, a boy approaches one of the party. The lad is sunburnt and wears grubby, though not tattered clothes. Though small, his adolescence is visible by the down on his upper lip slowly taking the form of an adult moustache. He proffers a bottle from a number in a cloth bag he carries. It contains a dark liquid.

“What’s this?” asks the foreign returnee hesitantly in broken Tamil; he is apprehensive lest it be some heady, clandestine Wanni brew being sold to him.

“Bee’s honey...” says the boy, his eyes lighting up at the question in the prospect of putting through sale.

“Where did you get it from?” asks the foreign returnee, the sight of the exotic kindling gastronomic excitement, somewhat jaded from years of eating western junk food.“My brother gets it. I sell it!” says the boy, his voice now alive with enthusiasm hoping to lock the foreign returnee in conversation as a prelude to selling his wares.

The sight of boys aged between 10-15 years selling bee’s honey at the checkpoints in Omanthai and Muhamalai on both sides of the border is a common sight today. The years of war, displacement and separation have left them drowning in poverty, with only the meagre allowances from the government available to support their bloated families. The ceasefire was a wonderful opportunity because the threat of death through shelling or an air raid receded. But the desperate circumstances in which their families lived did not change.

Then came a rumour that the Jaffna – Kandy Road was reopening. There seemed to be a faint glow of opportunity to earn a few rupees to support the family. But who was to earn it? Not the father, who was dead perhaps or had disappeared; not the mother who had to look after toddlers in the brood. The task of the breadwinner thus becomes the onerous responsibility of a boy or girl between the ages 10 and 15. He or she by rights (and by definition of UNICEF) should be going to school.

Chandran is 12 years old. He is among the 16 kids who hang out at Thandikulam checkpoint selling honey. His friends sell apples or oranges. They play practical jokes on each other and the lively banter between them is infectious. But below that, competition is keen. A few more apples sold could mean an extra bit of food that would go a long way to fill the empty stomachs at home.

Chandran is from a family of five. He has a brother older than him and a sister. He also has a brother and sister younger to him. Chandran is shy, and despite the eagerness to sell bottles of honey, scared.

“I have to work. My elder sister is maimed. She got caught to an exploding shell and has to get treatment every month. Unless I work every day, we cannot afford to give my sister the treatment she needs,” Chandran said, speaking hesitantly.

He studied up to the fourth grade and dropped out. The family lived in Kilinochchi but due to the fighting was displaced. Chandran’s father disappeared during the trek in 1998 from the Wanni to Vavuniya, where the family now lives.

“My brother is 17. He goes to work. He gets the honey for me to sell,” said the little boy.Thilakan is his friend, who is from Vavuniya too. He is around 10 years old. The mudalalai gives him a bag of 10 apples to sell. If he sells one bag he gets a commission of Rs.10. “During the early days after the road was opened I used to get up to 100 rupees a day from the visitors; now with the numbers dwindling my daily income is not so good,” he said.

At Muhamalai another group of children are busy selling patties. They are mostly from a village in Kilinochchi. A girl comes up; she is reluctant to give her name and stares at the visitors curiously as if trying to get into their thoughts. She says she is 10 and her sister, 13. They start from Kilinochchi bus stand at 6.30 every morning spending Rs.25 for the ticket with a stock of patties their mother bakes for them. They sell till around three in the afternoon, but if they finish their stock, go earlier.

When asked whether they go to school they replied in the affirmative, their eyes shifting elsewhere. But the fact is you see them at the checkpoint day in day out.

Chandran, Thilakan and our little patties-seller are not unique. They are among the scores you will see at any market whether it be in Kilinochchi, Puthukudiyruppu, Mallavi or Kalliyankaadu. They are all between 10-15 years, which the war has left as providers to their families.

The Sabapathy camp for the internally displaced is teaming with children. They are from among the thousands of IDPs who were displaced from Valigamam due to deliberate and systematic efforts by the Sri Lanka army between 1983-1993 to depopulate the area by shelling and aerial bombardment. The waste that was result of this criminal policy became the High Security Zone (HSZ).

Most of the families in the Sabapathy camp are driven to the end of their tether due to the circumstances they find themselves in. Some were displaced as far back as 1990. There are 99 children in the camp between 9-15 years of which 30 do not go to school. The balance go to school but irregularly and enduring much hardship.

V. Alageswaran (15) left from the ninth year in 2002. While his more fortunate counterparts were planning to sit the GCE Ordinary Level examination, desperation drove Alageswaran from school. His 16-year-old brother Anbarasan left from the eighth grade in 2000. They left because they were already working at night in a bakery, while attending school by day. They worked continuously during the weekend. The nightshift made it possible for them to be present in school only every other day.

“But baking in the oven before an open fire gave us burns all over our bodies and unable to withstand it any longer we decided to return to school,” said Alageswaran. But that did not last too long and they discontinued.

Anbarasan is now a casual employee mostly working as a labourer.

Their father is sick and cannot be employed. Alageswaran’s family has 10 members – eight children and the parents. His elder sister is studying her GCE Advanced Level. The brothers earn basically to support the sister’s education. Three of the younger siblings are in school too. Poverty that dogs the family is partly due to the heartless policies followed by the government in granting relief. According to the government’s assistance programme, the maximum a family receives as relief payment is calculated for families of five and above – that is Rs.630 for fortnight or Rs.1260 per month. This is ridiculously low for a family of 10 to subsist on: hence Anbarasan and Alageswaran have to work to keep the home fires burning.

A. Kugathevnathan is an inmate of Sabapathy camp. He is 17 and has studied up to his GCE Ordinary Level. The IPKF killed his father in Oorani after which his mother married again rendering him for all intents and purposes an orphan. He would want to continue studying, but has to find work to live. And his O/Levels notwithstanding he can only command casual employment.

K. Nimalathas is also 17. He left school in 2000 and works as a casual manual employee, to help his 7-member family, which subsist on his income. The other siblings go to school. “If we are to educate the other children we have to send at least one to work. The relief allowances of 630 rupees a fortnight is not enough for seven people to manage on,” says Kunalingam Ranjani (35), Nimalathas’ mother.

But her anxieties are nothing compared to Selvarasa Vasantha (45), mother of eight children. A mine that was concealed behind a cinema in Chunnakam maimed her husband in 1997 and he has not been employed since. One of the eight children married, but committed suicide due to a dispute arising from dowry payments. Another child is now 20 and visually handicapped.

“I have two children studying in year three and six. I have to support them. I bake titbits and sell them in schools to make ends meet,” she told Northeastern Herald. Domestic pressures have become a great disincentive to formal learning. This has led to UNICEF and other organisations pioneering a drive to upgrade school enrolment. But just the fact children are in school is not a panacea for all ills. Children who are most affected are from among the poorest sections of Jaffna society and attend schools by trying to carry on as well as they might under straitened circumstances.

Some of the children of the displaced from Valigamam go to Vasvilaan Central School, Tellipalai Union College and Mathuthanamadam Ramanathan College, which are among the few that function in Valigamam.

“There is no discipline in the conventional sense of the word because children are irregular to school. But the problem is that they have to work. They come to school only if the parents insist they should,” said A. S. Nadarajah, retired principal of Vasavilaan Central College.

S. Varaharajah, deputy director of education, Jaffna zone, pointed to logistical problems arising from irregular attendance. “The irregularity of the students does not allow for a accurate computation of the number of students actually attending school. This becomes a problem later when applying for assistance etc., because there are no concrete figures to go by,” he lamented.

An important reasons for children who come irregularly, to dropout completely is the school system that continues to function according to the archaic way of passing and failing students. If the children fail to go to school, they fail exams; when they are not given promotions their peers humiliate them for a lack of intelligence. Children dropout altogether if they are unable to come to terms with such degrading treatment.

“How can we go to school when we have to sit with smaller children? They laugh at us,” said children Bharathipuram Maha Vidyalayam in Kilinochchi.

Schools find it difficult to take the initiative to help children who are unable to come regularly because the institutions themselves are not financially well equipped. Bharathipuram Maha Vidyalayam is so poor that children sit on mats in dilapidated huts. At this school children have dropped off as long as two years and returned. Since they have to catch up with the class and because they go to work in daytime, volunteers have night school, but that too is not sufficient.

The war has also affected the psychosocial well being of children, denting their willingness to study or concentrate. There is child studying in Meesalai Hindu College (name withheld) who witnessed a bomb explosion in close proximity, when she was in the sixth grade. Now in her in Year 10 she displays fear of crowds, is very reclusive, constantly complains of headaches and takes a long time to be cured of even common illnesses. She is one among many persons traumatised by their encounters with war and unable to deal with them.

A teacher in a school in Erlalai who did not wish to be named said, “Children display very aggressive behaviour while in school. We cannot instil any discipline. But when you study their backgrounds you find they not only work to provide for the home, which curbs the freedom of childhood, but also come from broken families and can express their frustration only in school,” he said.

Rev. Fr. S. Damien, a psychosocial counsellor said symptoms of disorders arising from trauma are evident in students and children. They displayed unexpected aggression, learning disorders, falling performance in school, and psychosomatic problems such as insomnia, chest pains, poor appetites etc. He said there was very little infrastructure available in Jaffna to cope with the demands made on psychosocial counselling and other services.

Health and social workers express deep anxiety about the long-term consequences of mass poverty and psychological trauma on the rising generation. What is worse, the aid promised at the donor conferences appear to emphasise rebuilding of physical infrastructures and not on providing services to arrest the appalling levels to which social services have descended in the northeast. This will only deteriorate further if they continue to go un-addressed, while refugees and IDPs begin their homeward trek.

Thanks to Northeastern Herald
2003 February 07 - February 13

Sunday, November 4, 2007

பின்னவீனத்துவ ஆசிரியம்

பேராசிரியர்.சபா.ஜெயராசா
கல்வியியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பின்னவீனத்துவ ஆசிரியம் எல்லை நிலை ஆசிரியம் [Border Pedagogy] முதலாம் எண்ணக்கருக்கள் பின்னவீனத்துவின் வளர்ர்ச்சியை அடியொற்றி மேலெழத்தொடங்கியுள்ளன. அந்தஸ்து நிலையிலும் இனக்குழுமநிலை, பால்நிலை முதலியவற்றிலும் ஓரங்கட்டப்பட்டவர்களைக் குவியப்படுத்தும் கல்வி முன்னெடுப்புகளை பின்னவீனத்துவ ஆசிரியம் வலியுறுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்று மேலெழுந்துள்ள பன்முகப் பண்பாட்டு கல்வி நடைமுறைகள் [Multicultural Practices] பின்னவீனத்துவத்தை நோக்கிய கற்றல் கற்பித்தல் முன்னெடுப்புகளாக அமைகின்றன.

சமகாலத்து அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளராகிய ஹென்றி ஏ.கி.றொக்ஸ் [Henry A.Giroux] என்பார் பின்னவீனத்துவக் கல்வி நடைமுறையிலே தீவிர ஈடுபாடுகாட்டி வருகின்றனர். தனது கருத்துக்களை வலியுறுத்துவதற்கு அவர் பின்வரும் பின்வரும் மேற்கோள்களை முன்னெடுக்கிறார். [Henrg.A.Giroux, [1991], Towards Postmodern Pedogogy, Albany, State university of New York press]

(அ)
நாடக எழுத்தாளரும், ஒரு காலத்தில் சிறைக் கைதியாகவும், பின்னர் செக்கோசிலோவாக்கியாவின் அதிபராகவும் இருந்த ஹேவல் "மக்களாட்ச்சிக் கோட்பாடு இலட்சிய வடிவில் நிறைவடைந்தது என்று கொள்ளப்பட்டாலும் அதனுள்ளே விடுதலைக்கும் மனித மாண்புகளுக்குமான நெருக்குவாரங்களும் போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

(ஆ)
வரலாற்றாசிரியரும் சமாதான வினைஞருமாகிய ஈ.பி.தோம்சன் "இருபது ஓராம் நூற்றாண்டில் மானிடம் எதிர்கொள்ளப்படவேன்டியிருக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகைக்கும் முகம் கொடுக்கக் கூடியவாறு வரலாற்று பக்கங்களை மூடிவிடாது திறந்து வைக்க வேண்டியுள்ளது." என்று விளக்கியுள்ளார்.

(இ)
போலந்தின் தொழிலாளர் காப்புக் கழகத்தின் நிறுவுனராகிய அடம்மிச்சினிக்(adam Michnik) "மக்களாட்சி அரசியல் பற்றிய பயமும் மக்கள் தொகுதியிலே நிகழ்ந்துவரும் பெருநிலையான கூட்டுப் பரிதவிப்பு அவலமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களாட்சி மீது விடுவிக்கப்பட்டுள்ள இந்தக்கணைகளைப் புறந்தள்ளிவிடாமல் கருத்து வினைப்பாட்டுக்கு எடுக்க வேண்டிய தேவையை கிறொக்ஸ் வலியுறுத்துகின்றார்.

மக்களாட்சி கோட்பாடு தனிமைப்பட்டு விட்டது, செயலிழந்து விட்டது, திக்குமுக்காடுகின்றதென பின்னவீனத்துவ ஆசிரியம் கருதுகின்றது. பொருத்தமற்ற ஓர் அரசியல் சிறைக்குள் மக்கள் சிக்கிக் கொண்டதாக எண்ணுகின்றனர். இந்நிலையில் மக்களாட்ச்சிக்கு உயிர்ப்பூட்டுவதற்கான கல்வி பற்றிய நோக்கு பின்னவீனத்துவக் கல்வியாளர்களிடத்து மேலோங்கியுள்ளது. வலுவிழந்து, இலட்ச்சியங்களைச் சுற்றிப் பின்தள்ளி வைத்திருக்கும் மக்களாட்சி நிலையைக் கல்விச் செயற்பாட்டினால் மட்டும் மற்றியமைக்க முடியுமா என்பது மறுபுறம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.

இந்நிலையில் பின்னவீனத்துவக் கல்வி பற்றிய பின்வரும் முன்மொழிவுகளை கிரொக்ஸ் முன்வைக்கின்றார்.

(அ)
அவரது முன்மொழிவுகளில் முதற்கண் திறனாய்வு அல்லது விமர்சன ஆசிரியம்[Critical Pedagogy] என்ற எண்ணக்கரு மேலெழுகின்றது. நல்ல பிரசைகளை உருவாக்குவதற்குரிய கற்பித்தல் நடைமுறை எனபவற்றைக்காட்டிலும், அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்கள் முதலியவற்றை விமர்சனப் பாங்குடன் அணுகச் செய்தல். நடைமுறையில் உள்ள சமூக அரசியல், முறைமைகளோடு இசைவுபட்டு இணங்கிச் செல்லாது. நடைமுறையிலுள்ள சமூக அரசியல் வடிவங்கள் மீது அறைவுகூவல் விடுப்பதற்கும், அவற்றை நிலை மாற்றம் செய்வதற்குமான திறனாய்வுக் கொள்ளளவை கல்விச் செயற்பாடுகள் வாயிலாக வளர்த்தல்.

வரலாற்றில் தாம் எங்கே நிற்கின்றோம் என்பதை உணர்த்துவதுடன், மக்களாட்சி வெகுசன வடிவங்களுக்கு உரியதான குரலை வெளிப்படுத்துவதற்குரிய ஆற்றலை முன்னெடுத்தல் வேண்டும். மக்களாட்சி பொது வாழ்க்கைக்குரிய கருத்து வினைப்பாட்டில் உயிர்ப்புள்ள பங்குபற்றுனராக மாணவரை உருவாக்குதல் வேண்டும். திறனாய்வு ஆசிரியம் மேற்கொள்ளும் வினைப்பாடு நடப்பியல் விவகாரங்கள் மீது பொருத்தமான வினாக்களை எழுப்புதலுடன் தொடர்புடையாது.

(ஆ)
பரந்த சமூகத்தை அணுகுவதற்குரிய பன்முக கருத்து வினைப்பாடுகளை (Discourses) நன்கு விளங்கிகொள்வதற்கும், தமது தொடர்புகளை மாணவர்கள் வடிவமைத்துக் கொள்வதற்குமுரிய ஏற்புடமைகள் அவசியமாகின்றன. வேறுபட்ட அறக்கருத்து வினைப்பாடுகளுடன் மாணவர்கள் தமது அனுபவங்களை எவ்வாறு பங்கீடு செய்து கொள்கின்றார்கள் என்பது அவதானிப்புக்கு உரியது. மனித அவலங்களையும் சுரண்டல்களையும் சமூக இடைவினைகள் தரைதட்டி நிற்றலையும் உணர்த்த வேண்டியுள்ளது. அதிகாரத்தொடர்புகள், சமூகநடைமுறைகள், அந்தஸ்து முதலியவற்றை அடியொற்றிய அறம் சார்ந்த உரைவினைப்பாடுகளேஎ சமகாலத்தில் வேஎண்டப்படுகின்றன.

பின்னவீனத்துவ ஆசிரியம் பற்றிய கருத்துகளை முன்மொழிந்தவர்களுள் சறொன் உவெல்ஸ் என்பவரும் குறிப்பிடத்தக்கவர் (Sharon Welch - 1991- In Postmodernism) பின்னவீனத்துவ ஆசிரியத்துவம் அறநிலையில் அறை கூவல் விடுப்பதாயும் அரசியல் நிலையில் நிலைமாற்றத்தை உள்ளடக்கியதாயும் இருத்தல் வேண்டுமென்பது அவரது கருத்து. பன்முகப்பட்ட நிலைகளிலும், முரண்பாடான நிலைகளிலும் மாணவர் தம்மை இனங்காணலையும் அகவய நிலைகளையும் எவ்வாறு கட்டுமை (Construct) செய்கிறார்கள் என்பது விளங்கிக் கொள்ளப்படவேண்டியுள்ளது. குழுக்களிடையே காணப்படும் தொடர்புகள் எவ்வாறு அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் பராமரிக்கபடுகின்றன என்பது விமர்சன ஆசிரியம் கவனத்திற் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

செறி ஹோம்ஸ் (Cherryholms, 1988) என்பவர் பின்னவீனத்துக்குரிய திறனாய்வு ஆசிரியம் பற்றி விளக்கும் போது, அரசியல் அதிகாரம், நீதி, போராட்டம், சமத்துவ அழிவு முதலியவற்றை வெறுமனே ஏட்டுக்குள் சுருக்கி விடமுடியாத மொழியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

கலைத்திட்ட உள்ளடக்கம் புனிதமானது என்ற ஆசாரங்கள் கைவிடப்பட்டு, பல்வேறு உரையங்களை (Narratives) உருவாக்கும் வகையில் மீளவாசிக்கப்படவும் வேறுபட்ட அரசியலுக்குரியவாறு மீள்வடிவமைக்கப்படவும் வேண்டும் என்பது ஹோம்சின் கருத்து.

மாணவர்களுக்குத் தகவலைக் கடத்தும் வடிவமாக அறிவைக் கருதாது, அதன் வரையறைகளும், தொழிற்பாடுகளும் தொடர்ந்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தனி மனிதரும் சமூகத்தினதும் விடுதலையை நோக்கி நகர்வதற்க்குரிய பொருண்மிய நிலவரங்களை திறந்த கருத்துப் பரிமாற்றம், கருத்துவினைப்பாடுகளை மக்கள் மயப்படுத்தல் என்பவற்றால் ஏற்படுத்துதல் இன்றியமையாதது. பொது வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய மக்களாட்சிக்கட்டமைப்பை உருவாக்குவதற்குரிய பன்முக உரையங்களை ஏற்படுத்தல் வேண்டுமென பிறிதொரு பின்னவீனத்துவக் கல்வியியலாளராகிய லக்கிளவ் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பின்னவீனத்துவக்கல்வியில் வலியுறுத்தப்படும் திறனாய்வு ஆசிரியம் கற்கை நெறிகளைப் பிரித்து வைக்கும் எல்லைகளை உடைத்துவிடுகின்றது. அது வெறுமனே அறிவாய்வியல் எழுகூற்றுக்களுடன் (Issues) அடங்கி நிற்கவில்லை. அதிகாரம், அரசியல், அறம் முதலியவற்றோடு இணைந்த வகையில் பின்னவீனத்துவ ஆசிரியம் கட்டுமை செய்யப்படுகிறது.

இங்கே எதிர்நினைவு (Counter Memory) ஆசிரியம் வலியுறுத்தப்படுகின்றது. ஒருவகைப்பட்டதும் கூட்டுமொத்தமாகத் திரட்டப்பட்டதுமான அழுத்தங்களின் மத்தியில் மெளனமாகி மூடியிருந்தோரின் குரல் எதிர் நினைவுகளால் மீட்டெடுக்கப்படுகின்றது. அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை அடியொற்றிய உரைவினைகளில் இருந்துதான் கல்வியும் பன்பாடும் விளக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையிலேதான் படசாலைகள் உருவாக்கும் விழுமியங்களையும் இனங்காணல் வேண்டும்.

தனது வரலாற்றுக் கட்டமைப்பையும் கருத்தியலையும் மறுத்தலித்து நிற்கும் உண்மைகளை மீளாய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமான ஆசிரியமாகின்றது. கருத்துவினைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நியாபித்தலை வலியுறுத்துதல் பொருத்தமற்றது. சமூக இருப்பில் இருந்தும், தொடர்புகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதன் மீது கல்வியியலாளர்கள் கவனம் கொள்ளல் வேண்டுமென பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுவது அவர்கள் மீது மார்க்சீயம் செலுத்தும் செல்வாக்கினை வெளிப்படுத்துகிறது.

கற்பித்தல் மிழிபற்றிய கவன ஈர்ப்பும் பின்னவீனத்துவ வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நோக்கி மொழி திருப்பவில்லை மாறாக மனோரதியப் பழைமையை நோக்கிப் பின்னே நகர்ந்த வண்ணமுள்ளது.

ஆசிரியர்கள் ஒடுங்கிய வாண்மை கட்டமைப்பை உடைத்து கொண்டு வெளிவரவேண்டியுள்ளது. இலட்சியங்களையும் சமூக நடைமுறைகளையும் உருவாக்கும் சமூக வேலையாட்கள் என்ற நடிபங்கை அவர்கள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் நுண்மதியாளர்களாக அவர்கள் மாற்றமடைய வேண்டியுள்ளது. கல்வித்துறையின் உள்ளார்ந்த திறனாய்வுகளுக்கு ஆசிரியர்கள் முகம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கையளிப்பவர்களாக ஆசிரியர்கள் தொழிற்படாது செயலூக்கமுள்ள அறிகைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோராய் இருத்தல் வேண்டும். ஒடுக்குமுறைகளை மீறி மேலெழுவதற்குரிய ஆசிரியமே சமகாலத்தில் வேண்ட்றப்படுகின்றது.

தனியாள் நிலையும் அரசியல் தொடர்புகளும் வலுவான பண்புகளை உருவாக்குமேயன்றி கவிழ்ந்து விடும் வீழ்ச்சிகளை ஏற்படுத்த மாட்டாது. பாலியல் சார்ந்த, வர்க்கம் சார்ந்த, இனத்துவம் சார்ந்த சுரண்டல்களை முன்னெடுக்கும் நிறுவனச் செயற்பாடுகளைக் கண்டு பின்வாங்கிவிடாது செயற்படுவதற்கு மேற்கூறிய ஒன்றிணைப்பு அவசியமாகின்றது.

அரசியல் மயப்பாட்டின் அடிப்படை தளமாகத் தன்னிலை முதற்கண் அமைகின்றது. வேறுபட்ட சமூக, பண்பாட்டு வரலாற்றுப் பின்புலங்களில் தன்னிலை இனங்காணல் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது பற்றிய பரந்த விளக்கம் வேண்டப்படுகின்றது. இவை பற்றிய தெளிவு கல்விச் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.

பலநிலை இனங்காணற் செயற்பாடுகள் மாணவர்களிடத்து இடம் பெறுகின்றன. மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் புறம் தள்ளி நீதியானதும், சமத்துவத்தை நிலைநிறுத்தக் கூடியதுமான, வலுக்கட்டமைப்பை மாணவர்களிடத்து ஏற்படுத்தக் கூடிய உரையாடலை ஆசிரியம் வழங்குதல் வேண்டும்.

பரந்த மக்கள்நிலை அரசியல் ஈடுபாட்டுக்குரியவாறு அனுபவங்களைக் கோட்பாடு நிலைக்கு மாற்றுவதன் மீது விமர்சனப்பாங்கான கவன ஈர்ப்பு அவசியமாகின்றது. பாதிப்பும் பழிவாங்கலும் பற்றிய கதைகளை ஒப்புவித்துக்கொண்டிருப்பதால் பயன் எதுவும் கிட்டப்போவதில்லை. அவற்றைக் கோட்பாட்டு நிலையில் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவற்றைப் பொருத்தமான முறையிலே ஒருங்கிணைப்புச் செய்யமுடியும்.

பின்னவீனத்துவக் கல்வியியலாளர்கள் கல்வியியலில் குறிப்பிட்ட சில குவியங்களை நோக்கிய மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கின்றனர். எல்லை நிலையில் உள்ளானவர்கள், சுரண்டலுக்குள்ளானவர்கள், பெண்கள், இனத்துவ நிலையிலும், பண்பாட்டுநிலையிலும் பின் தள்ளப்பட்டவர்கள் முதலியோரைக்குவியப்படுத்தும் கல்விச்செயற்பாடுகளில் வலியுறுத்தியுள்ளனர். மேற்கூறிய துறைகளில் பலமிழந்து நிற்கும் மேலைபுலக் கல்வி நடவடிக்கைகளுக்கு "இலட்சியச் சிகிச்சை" அவர்களால் வழங்கப்பட்டது.

நன்றி: அகவிழி

Friday, November 2, 2007

ராகிங் :- விளையாட்டல்ல விபரீதம்

-சேவியர்-

பள்ளிப்படிப்பை முடித்து கனவுகளுடன் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களின் முன்னால் விஸ்வரூபமெடுத்து ஒரு அரக்கனைப் போல கோரப் பற்களுடன் ஆக்ரோஷமாய் நிற்கிறது ராகிங்.

மூத்த மாணவர்களுக்கு பொழுது போக்காக இருக்கும் ராகிங் புதிய மாணவர்களை பல விதங்களில் கொடுமைப்படுத்துகிறது. ஆடல், பாடல் செய்யச் சொல்லும் சிறு ராகிங் துவங்கி, அவர்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் அதிகபட்ச வன்முறை வரை பெரும்பாலான கல்லூரிகளிலும், விடுதிகளிலும் இன்று ராகிங் கொடிகட்டிப் பறக்கிறது.

ராகிங் தொல்லையால் உயிரை இழந்தவர்களும், ராகிங் அவமானத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் அனேகர். இரவு பகல் கண்விழித்துப் படித்து, பெற்றோரின் கனவுகளையும், தங்கள் எதிர்கால இலட்சியங்களையும் தாங்கி கல்லூரி வளாகத்துக்குள் வரும் இளைய சமூகத்தை அவமானத்துக்கும், மரணத்துக்கும் அனுப்புகிறது ராகிங் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கிபி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் கிரேக்கர்களின் விளையாட்டுத் துறையில் இந்த ராகிங் செயல்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டு உத்வேகத்தை வளர்க்கவும், உள்ளுக்குள் வீரியம் பெறவும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை ராணுவ வளாகங்களுக்குள் புகுந்து கைதிகளை ராகிங் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கல்வி நிலையங்களில் ராகிங் பெருமளவு நடைமுறையில் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மிகவும் அதிக அளவில் ராகிங் செயல்முறைப் படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. கார்னெல் கல்லூரியில் 1873 ம் ஆண்டு நிகழ்ந்த மரணமே ராகிங் கொடுமையின் முதல் இரத்த சாட்சி!

முதலாம் உலகப் போருக்குப் பின் இந்த ராகிங் மேலும் அதிகமாக வளர்ந்து ராணுவ கூடாரங்களில் நிகழும் ராகிங் கொடுமைகள் கல்லூரிகளிலும் நுழைந்தன.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி ராகிங் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது எனலாம். எனினும் அது கிளைவிட்டுப் படர்ந்தது என்னவோ சுதந்திரம் கிடைத்த பின்பு தான்.

எனினும் அறுபதுகளின் இறுதி வரை ராகிங் இந்தியாவில் பெரிய பிரச்சனையாய் இருக்கவில்லை. காரணம் அப்போது கல்வியறிவும், உயர்கல்வியும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பெறும் நிலை இருந்தது. அந்த கலாச்சார, மத, இன வேறுபாடற்ற சூழல் ராகிங்கை அதிகம் வளர்க்கவில்லை. பல்வேறு மத, கலாச்சார மக்கள் கல்லூரிகளை நாடியபின்பு தான் இவை வேகமாய் வளர்ந்தன.

ராகிங் கொடுமை என்பதுகளில் இந்தியாவில் பெருமளவில் வளர்ந்தது. அதற்கு ஊடகங்களும் ஒருவகையில் காரணம் எனக் கொள்ளலாம். பரவலாக எண்பதுகளில் வளர்ந்த ராகிங் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளின் படையெடுப்பான தொன்னூறுகளில் அசுர வேகம் கொண்டது. ராகிங் மரணங்கள் ஆங்காங்கே வெளியே தெரிய ஆரம்பித்தன.

ராகிங் சட்ட விரோதமானது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கிரிமினல் சட்டத்தின் கீழ் நிறுத்தப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பான சட்டத்தை தற்போது இயற்றியுள்ளது. ராகிங் கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு இந்த சட்டம் மிகுந்த ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

ராகிங்கை ஆய்வாளர்கள் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது வார்த்தை ரீதியிலான ராகிங். இதில் புதிய மாணவர்களை பாடச் செய்வதும், கேலி பேசுவதும், பெண்களிடம் அவர்கள் வெட்கப்படும்படியாகவும் அவமானப்படும் படியாகவும் கேள்விகளைக் கேட்பதும். அவர்களிடம் கெட்ட வார்த்தைகளைப் பேசச் சொல்வதும் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

பெரும்பாலான கல்லூரிகளில் வார்த்தை ரீதியிலான ராகிங் உச்சகட்டத்தில் நடக்கும். இதில் அவமானமும், மன அழுத்தமும் அடைந்து புதிய மாணவர்கள் தலை குனிவதைப் பார்ப்பதில் மூத்த மாணவர்களுக்கு ஒரு குரூர திருப்தி.

இரண்டாவது உடல் ரீதியிலான ராகிங். ஒரு காலால் நிற்கச் சொல்வது. விடுதிகள் எனில் அறையைச் சுத்தம் செய்யச் சொல்வது, மூத்த மாணவர்களின் காலை அமுக்கச் செய்வது, புதிய மாணவர்களை அடிப்பது, உதைப்பது என இதில் பல வகை.

இந்த ராகிங் ஒரு எல்லையைத் தாண்டும் போது உடல்ரீதியிலான பல காயங்களையும், சில வேளைகளில் மரணத்தையும் தந்து விடுகின்றது. வார்த்தை ராகிங் வலுவடைந்து உடல்ரீதியான ராகிங்கிற்குள் நுழைவது வெகு சகஜம்.

மூன்றாவது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல். இது உளவியல் ரீதியாக புதிய மாணவர்களை மிகவும் துன்புறுத்தக் கூடிய ஒன்று. பெரும்பாலான தற்கொலைகள் இந்த ராகிங் காரணமாகவே நிகழ்கின்றன. ஆடைகளை அவிழ்க்கச் செய்வது இந்த வகை ராகிங்கில் நிகழும் குறைந்த பட்ச நிகழ்வு எனில் மற்றவற்றை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையுமே ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகின்றன என்று சொல்லலாம். வார்த்தைகளில் ஆரம்பித்து வன்முறை பாலியல் தொந்தரவு என எல்லா வட்டங்களுக்குள்ளும் இந்த ராகிங் நுழைந்து விடுகிறது.

ராகிங் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்னும் போலித்தனமான வாதத்தை முன்வைத்து இன்று ராகிங்கிற்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது.

ஒன்றாம் வகுப்பில் ராகிங் நடக்கவில்லை. ஆரம்பப் பள்ளிகளில் ராகிங் நடக்கவில்லை. அங்கெல்லாம் மாணவர்களிடம் ஒற்றுமை இல்லையா ? பெரிய அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறீர்கள். உயரதிகாரி உங்களை ஆடை அவிழ்க்கச் சொன்னால் அதை ஒற்றுமை வளர்க்கும் செயல் என்று எடுத்துக் கொள்வீர்களா ?

ராகிங் ஒரு அப்பட்டமான வன்முறை. எந்த விதத்தில் ராகிங் செயல்படுத்தப் பட்டாலும் அதில் நன்மை கடுகளவும் இல்லை என்பதே உண்மை. ராகிங் தொல்லையை ஒழிக்க கல்லூரிகளும் விடுதி நிர்வாகமும் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

ராகிங் கிராமப்புறங்களிலுள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் நிகழ்வதில்லை. நகர்ப்புறங்களில் தான் இவை மிகவும் அதிகம். அதுவும் விடுதிகளில் மிக மிக அதிகம்.

மூத்த மாணவர்கள் தங்கள் கடமைகளை உணரவேண்டும். இளைய மாணவர்கள் தங்கள் கடந்த கால ராகிங் கொடுமைகளுக்கு வடிகால் தேடும் விதமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனாலும் ராகிங் சகஜம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பலர் முயல்கின்றனர்.

உளவியல் ரீதியாக மாணவர்களை மிகவும் துன்புறுத்தி அவர்கள் மனதில் ஆறாக் காயத்தை உண்டாக்கி அவர்களுடைய எதிர்காலத்தையே வலிமிகுந்ததாக்கும் வல்லமை ராகிங்கிற்கு உண்டு என்கின்றனர் உளவியலார்.

ராகிங் தாக்குதலுக்கு ஆளாகும் பெரும்பாலானோர் இவற்றை கல்லூரி நிர்வாகத்திடமோ, காவல்துறையிடமோ சொல்வதே இல்லை. தங்களுடைய அவமானத்தை சபையேற்றம் செய்வதை அவமானமாய் இவர்கள் கருதுவதில் நியாயம் இருந்தாலும், இப்படி அறியப்படாமல் போகும் தவறுகள் தவறு செய்பவர்களுக்கு ஊக்கத்தை அளித்து விடுகிறது.

ராகிங் புதிய மாணவர்களை வலிமையானவர்களாக மாற்றும் என்னும் ஒரு சமாளிப்பையும் ராகிங் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். இது அவர்களுடைய சிந்தனைகளில் வன்முறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவான ராகிங் வழக்குகளில் 62 விழுக்காடு உடல்சார்ந்த வன்முறை எனவும், 33 விழுக்காடு பாலியல் சார்ந்த வன்முறை எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல் எங்கும் இல்லை இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல்கள் பெரும்பாலும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதே உண்மை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பதினோரு பேர் ராகிங் கொடுமையினால் இறந்து போயிருக்கிறார்கள். பத்துபேர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்கள். 35 பேர் காயமடைந்திருக்கிறார்கள் பலர் கல்லூரியை விட்டு விலகியிருக்கிறார்கள். இவையெல்லாம் ராகிங் வெறும் விளையாட்டு என்று சொல்பவர்களை சிந்திக்க வைக்கும் சில நிகழ்வுகள்.

ராகிங் கொடுமைக்குப் பயந்து சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் இரண்டு மாதங்கள் கல்லூரிக்கே அனுப்பாமல் இருப்பது கூட உண்டு.

பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக், கலைக்கல்லூரிகள் என பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் ராகிங் நடந்தாலும் பொறியியல் கல்லூரிகளில் தான் அதிக பட்சமாக 35 விழுக்காடு ராகிங் தொல்லைகள் நிகழ்கின்றன.

கல்லூரிகளையும் விடுதிகளையும் ஒப்பிட்டால் 84 விழுக்காடு ராகிங் வன்முறைகள் விடுதிகளில் தான் நடக்கின்றன எனும் அதிர்ச்சித் தகவலையும் ஆய்வுகள் வெளியிட்டிருக்கின்றன.

ராகிங் விளையாட்டுத்தனமானது, காயப்படுத்தாதது, மூத்த மாணவர்களோடு ஒற்றுமையை வளர்ப்பது, உறவுகளைப் பலப்படுத்துவது புதிய மாணவர்களை துணிச்சல்காரர்களாக்குவது எனும் விதண்டாவாதங்களை ஒதுக்கும் விதமாகத் தான் வந்திருக்கிறது ராகிங் கை கிரிமினல் வழக்காகப் பதிவு செய்ய வழிகோலும் சட்டம்.

பெரும்பாலான கல்லூரிகள் ராகிங் பிரச்சனைகளை அறிந்தாலும் கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்குள்ளேயே அவற்றை பூசி மெழுகப் பார்ப்பதுண்டு. இதனால் பெரும்பாலான பிரச்சனைகள் கல்லூரி எனும் வளாகத்துக்குள்ளேயே நீதி காணாமல் புதைபட்டுப் போய்விடுகிறது.

2001ம் ஆண்டே ராகிங் அரசினால் தடை செய்யப்பட்ட போதும் துயர நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 211 வழக்குகள் ராகிங் கொடுமையினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை முற்றிலும் களையப்பட கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

ராகிங் பிரச்சனைக்கான முக்கியமான காரணங்களாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

* கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற ஒரு கொடிய செயலாக ராகிங் சமூகத்தில் நினைக்கப்படுவதில்லை. அது இலகுவாகவே பெரும்பாலும் பார்க்கப் படுகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் படும் அவஸ்தை வெளியே தெரிவதில்லை.

* கல்லூரி நிர்வாகம் ராகிங் இருப்பதை பெரும்பாலும் மறைத்து விடுகிறது, காரணம் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதும், கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமோ என பயப்படுதலுமே.

* ராகிங் செய்யும் மாணவர்களை புதிய மாணவர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் எங்கும் இல்லை. கல்லூரி நிகழ்வுகளுக்கு காவல்துறையை எப்போது அணுகவேண்டும் என்னும் விளக்கங்களும் பெரும்பாலும் இருப்பதில்லை. கல்வி நிறுவனங்களும் காவல்துறையின் தலையீடு கல்லூரிக்குள் நுழைவதை விரும்புவதில்லை.

* பெற்றோர் பெரும்பாலும் ராகிங் பிரச்சனையின் ஆழத்தை அறிவதில்லை கல்லூரியில் நிகழும் சிறு கேளிக்கை விளையாட்டு எனுமளவிலேயே பொதுவான சிந்தனை கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பெற்றோருடன் சகஜமாகப் பகிர்ந்து கொள்வதில்லை.

* பொதுமக்களும் ராகிங் என்பதை ஒரு விளையாட்டாகவே கருதுகிறார்கள். விடுதிகள் நிகழும் அதிகபட்ச பலாத்காரங்களைக் குறித்து அவர்கள் அறிவதில்லை.

* கல்லூரி நிர்வாகம் ராகிங் பிரச்சனையில் இறங்க ஏதேனும் காரணங்களுக்காய் பயப்படுகிறது, அல்லது தவிர்க்க நினைக்கிறது.

* ராகிங் குறித்து சரியான ஆய்வுகளோ, தகவல்களோ, விழிப்புணர்வோ மக்களிடம் இல்லை.

* ராகிங் குற்றத்துக்கான தண்டனைகள் பொதுவாக கல்லூரியை விட்டு நிறுத்துவதாக இருக்கும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நிலை வரவேண்டும். காவல்துறை ராகிங் வழக்குகளை முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.

புதிய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டியவர்கள் அவர்களை ராகிங் மூலம் நிர்மூலமாக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

தற்போது பல கல்லூரிகள் ராகிங் பிரச்சனைக்கு முடிவு கட்ட மும்முரமாய் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கதே. எல்லா கல்லூரிகளும் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

* சில கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என பெற்றோரிடம் உறுதிப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார்கள். இது பெற்றோருக்கும் ராகிங் பிரச்சனையில் அதிக பொறுப்புணர்ச்சியை அளிக்கும்.

* சில கல்லூரிகளில் புதியவர்களுக்கு வகுப்புகள் ஓரிரு வாரங்கள் முன்னதாகவே துவங்கிவிடுகின்றன. இதன் மூலம் புதிய மாணவர்கள் கல்லூரி வளாகம், ஆசிரியர்கள், சூழல் குறித்த நல்ல அறிமுகம் பெற முடியும். இவை ராகிங் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு மாணவர்களைத் தயாராக்கும்.

* பெரிய அலுவலகங்களில் நடைபெறும் ‘buddy’ முறைபோல கல்லூரிகளிலும் ஏற்படுத்த வேண்டும். அதாவது புதிய மாணவர்கள் கல்லூரிகளில் வரும்போது மூத்த மாணவர் ஒருவனை இளைய மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாய் நிர்ணயிக்க வேண்டும். அவர் கல்லூரியில் இளைய மாணவர் சகஜமாக படிக்க உதவ வேண்டும். இந்த வழக்கம் மேலை நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

* விடுதிகள் இருக்கும் இடங்களில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள், அவர்களுடைய அறை எண் போன்ற விவரங்களை கல்லூரி வலைத்தளத்திலோ, கல்லூரி வளாக அறிவிப்புப் பலகையிலோ பதிவு செய்வதும் சிலரால் பரிந்துரைக்கப்படுகிறது.

* ஊடகங்கள் ராகிங் குறித்து மிகவும் கவனமுடன் செய்திகளை வெளியிடவேண்டும். ராகிங் கிரிமினல் குற்றம் என்பதும், அது சமூகத்துக்குத் தேவையற்றது என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கலாச்சாரங்கள் பெரும்பாலும் சமூகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை நிரூபிக்கும் பட்டியலில் ராகிங்கும் இணைந்திருக்கிறது.

வெறும் சட்டத்தினால் மட்டும் ராகிங் முழுமையாக கட்டுக்குள் வந்து விடும் என்று சொல்ல முடியாது. சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வே முழுமையான பலன் தரும். சமூக அக்கறை மேலெழும்பும் போது கல்லூரி நிர்வாகங்களும் ராகிங் தடுப்பு முயற்சிகளில் முழுமையாய் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படும்.

ராகிங் நாகரீக சமூகத்தில் உலவும் காட்டுமிராண்டித்தனம், எதிர்ப்போம், வலிமையான எதிர்காலம் படைப்போம்.

நன்றி:கவிதைச்சாலை

Thursday, November 1, 2007

சிறுவர் இராணுவம்

சர்வதேச ரீதியிலான சட்டத் தடை இருந்தபோதிலும் தற்சமயம் குறைந்தது 20 நாடுகளில் யுத்தத்திலும் ஆயுதம் தாங்கிய சண்டையிலும் சிறுவர்கள் இராணுவத்தினாராக நிறுத்தப்பட்டுள்ளனர். சிறுவர் உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்குமான அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட சிறுவர் இராணுவம் பற்றிய சர்வதேச அறிக்கையின் பெறுபேறே இதுவாகும்.

'சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் உள்ள சட்டரீதியான தடையை நடைமுறைப்படுத்தவேண்டும' என்று இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

2001 ற்கும் 2004 ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் அல்லது சண்டையில் குறைந்தது இருபது நாடுகளில் சிறுவர்கள் யுத்தகளத்தில் இராணுவத்தினராக நிறுத்தப்பட்டனர். இந்த நாடுகளாவன: ஆப்கானிஸ்தான்,அங்கோலா, புறுண்டி, கொங்கொ ஜனநாயகக் குடியரசு, கொலொம்பியா, Cote d Ivoire (Ivory Coast), கென்னியா, இந்தியா, ஈராக்,இஸ்ரேல்-பாலஸ்தீனாவின் சுயாதீன எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், இந்தோனேசியா, லிபேறீயா, மியன்மார்(பர்மா), பிலிப்பைன்ஸ், றஷ்சியக் குடியரசு, றுவண்டா, இலங்கை, சொமாலியா, சு10டான், உகண்டா.

இவற்றில் அதிகமான இராணுவச் சிறுவர்கள் விடுதலை இயக்கங்களின் இராணுவத்தினராக அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயினும் சிறுவர்களை யுத்தத்திற்கு அனுப்பும் அல்லது மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் மேற்கொள்ள தூண்டிவிடும் துணை இராணுவக் குழுக்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அரசுகளே உதவிவருகின்றன. சில அரசுகள் சிறுவர்களையும் இளைஞர்களையும் கட்டாயமாக சேர்ப்பதிலும் அதற்கான பிரச்சாரம் செய்வதிலும் பின்வாங்கலின்றி செயற்பட்டுவருகின்றன.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சிறுவர்களை இராணுவத்திற் சேர்க்கும் துஸ்பிரயோகத்திற்கெதிராக மீண்டும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐந்து ஆபிரிக்க நாடுகளாகும்.

ஆப்கானிஸ்தான், அங்கோலா, சிறெலியோன் போன்ற யுத்தம் முடிவுக்குவந்த நாடுகளில் கடந்த மூன்று வருடகாலங்களில் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் தொகை 40.000 என்று ஊகிக்கப்படுகின்றது. இதேசமயம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள்கள் Cote d Ivoire (Ivory Coast)>சுடான், மற்றும் லிபேரியா போன்ற நாடுகளில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடிக்கடி மாறுகின்ற போராட்ட நிலைமைகளினாலும் இந்த இடங்களில் சண்டையில் கலந்திருக்கும் நிறையப் பிள்ளைகளை உதவி நிறுவனங்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளினால் தொடர்புகொள்ளமுடியாமல் இருப்பதுவும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் பற்றிய சரியான கணக்குப் பற்றி விசாரணைகள் மேற்கொள்வதில் தடங்கல்கள் இருந்துவருகின்றன.

'சிறுவர் இராணும் இல்லாத ஒரு உலகம் சாத்தியம்தான் . முதலாவது அடி எடுத்துவைக்கப்பட்டுவிட்டது' என்றார் terre des hommes என்கின்ற ஒரு உதவி நிறுவனத்தின் பணிபுரியும் அன்டிறெயாஸ் றிஸ்ரர். ஆனால் இந்த விடயத்தில் அனேகமாக அரசியல் ரீதியான உந்துதல்(நோக்கம்) இல்லை என்கிறார்' சர்வதேசத்து அரசுகளும் இதற்கான சர்வதேச ரீதியிலான பாதுகாப்புத் தீர்மானங்களை நிறைவுசெய்வதற்கும் தாமே இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்' என்று றிஸ்ரர் கேட்டுக்கொண்டார். இராணுவச் சிறுவர்களுக்கான ஜேர்மனியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இவராவார். இந்தக் கூட்டமைப்பில் உலக பொதுமன்னிப்புச் சபை, யூனி செப்பின் ஜேர்மனியக் குழு, சிறுவர்களுக்கான அவசர உதவி என்கின்ற நிறுவனம், லூத உலகக் கூட்டு, மெடிக்கோ இன்ரநசனல், மிஸ்சியோ, terre des hommes, ஆபிரிக்க நாடுகளுக்கான வலைப்பின்னல் அமைப்பு, மற்றும் உலகக் கண்ணோட்டம் ஜேர்மனி ஆகிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

2002 ஆண்டின் சிறுவர்உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின்; ஒப்பந்தத்தில் பிற்சேர்க்கப்பட்ட குறிப்பின்படி சிறுவர்களையும் பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட இளைஞர்களையும் யுத்தத்தில் சேர்ப்பது (இராணுவத்தில் சேர்ப்பது) தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் இதுவரை 116 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. 87 நாடுகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அல்லது உடன்பாடளிக்கப்பட்ட பின்னரும் சில நாடுகளில் தொடர்ந்தும் சிறுவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர். உதாரணமாக ஜனநாயகக் குடியரசாகிய கொங்கோ, லிபேரியா, றுவண்டா, உகண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளும் அப்பானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளுமாகும்.

'இந்த சர்வதேச அறிக்கை காட்டி நிற்பதாவது தற்காலத்தில் நடைபெறும் அதிகமான பாரிய போராட்டங்களில், யுத்தங்களில் சிறுவர்கள் பங்குபெறுகின்றனர் என்பதாகும்.' என்று விளக்குகின்றார் சிறுவர்களுக்கான அசர உதவி என்ற நிறுவனத்தில் பணிபுரியும் பாபறா டுனவால்ற்;. சிறுவர்கள் கடின உழைப்பிற்கும், கொள்ளை அடிப்பதற்கும், வன்முறைக்கும், பாலியற் பாலத்காரத்திற்கும், கொலை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் காயப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர். கொல்லப்படுகின்றனர். இந்தப் பகிரங்கமான சிறுவர்களின் உரிமைகள்; மீறல்களுக்கு எதிராக தி;ட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

'இராணுவச் சிறுவர்கள் பலிக்கடாக்களாகவும், அதேவேளை குற்றச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்' என்கின்றார் ஊனிசெப் பேச்சாளர் றுடி ரார்னெடென். சமாதான உடன்படிக்கைகளில் சிறுவர்களை இராணுவத்திலிருந்து நீக்குவது, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதுபோன்ற உதவி வேலைத்திட்டங்களை அடிப்படையாக உள்ளடக்கியிருத்தல் வேண்டும். 'இதற்காக சர்வதேசம் தழுவிய ஒருங்கிணைந்த அரசியல் அழுத்தமும், நிதி உதவியும் அவசியம்' என்கிறார் ரார்னெடென்.

இந்தக் கூட்டமைப்பானது ஜரோப்பிய ஒன்றியத்தையும் ஐ.நா. பாதுகாப்புச் சபையையும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பத்திலுள்ள தடையை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொணடுள்ளது. மேலும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்புச் சபையைச் சேர்ந்த சுசன பௌமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி - உதவி.net

இளகிய இதயம்

தமிழில்: எம்.எச்.எம்.யாக்கூத் -முன்னை நாள் அதிகாரி, தேசிய கல்வி நிறுவகம்.-

பல வருடங்கட்கு முன்னர் சேவையாற்றிய ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவரின் கதை இது. அவரது பெயர் திருமதி. தோம்சன். தனது பாடசாலையில் 5 ஆம் வகுப்புக்கு, வகுப்பாசிரியராகச் சென்ற முதல் நாளன்று அவர் ஒரு பெரும் பொய்யைச் சொன்னார். பெரும்பாலான ஆசிரிய, ஆசிரியைகள் வகுப்பு முன்னிலையில் நின்று தமது மாணவ மாணவியரை நோக்கிக் கூறுவதி போல அவரும் "நான் உங்கள் ஒவ்வொருவர் மீதும் சமமாக அன்பு செலுத்துகின்றேன்". என்று. என்றாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் அந்த வகுப்பில் முன்வரிசையில் ஒரு சிறுவன் கதிரையில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அவனது பெயர் தியடோர் ஸ்ரொடார்ட். திருமதி தொம்ஸன் அவனைக் கடந்த வருடத்தில் இருந்தே அவதானித்து வருகின்றார். அழுக்கு படிந்த உடைகள்; அழுக்கு படிந்த உடல்; பரட்டை தலை; முன்னர் போன்று மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதும் கிடையாது.

திருமதி தொம்சன், தியடோரின் தவணைப்பரீட்சை விடைத்தாள்கட்குப் புள்ளியிடத் தொடங்கினார். தடித்த முனைச் சிவப்பு பேனையால் தொடந்தும் X அடையாளங்கள் பல இட்டார். முடிவில் ஒவ்வொரு விடைத்தாளின் மேற்பகுதியிலும் 'F' எழுத்துக்களை பெரிதாக இட்டார். தான் கற்பிக்கும் வகுப்பு மாணவ மாணவியரின் கடந்த காலக் குறிப்பேடுகளை மீளாய்வு செய்யும் கருமத்தில் திருமதி. தோம்சன் ஈடுபட்டார். குறிப்பேடுகளை ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்தார். இடைநடுவே தியோடரின் குறிப்பேடு கண்ணில்பட்டது. அதனை ஒருபுறமாக ஒதுக்கி வைத்தார். மற்றைய மாணவர்களின் குறிப்பேடுகளைப் பரிசீலித்து முடித்த பின்னர் கடைசியாக தியடோரின் குறிப்பேட்டுக் கோவையைக் கையில் எடுத்தப் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டத் தொடங்கினார். அவரது கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.

"தியடோர் விவேகம் மிக்கவன்; அதி திறமைசாலி; அவனது முகத்தில் சிரிப்புக்குக் குறைவே இல்லை; வேலைகளைச் செவ்வனவே செய்து முடிக்கின்றான்; ஒழுக்க சீலனாக நடந்து கொள்கின்றான்; அவன் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை....." -இது அவனது, முதலாம் வகுப்பு ஆசிரியை எழுதி வைத்த குறிப்பு.-

"தியடோர், திறமைசாலி; சகபாடிகளுடன் இணக்கமாக நடந்து கொள்கின்றான்; அவனது தாயார் கடுமையாக சுகவீனமுற்றுள்ளார். அண்மைக்காலமாகச் சற்றுக் குழப்பமடைந்து காணப்படுகின்றான். வீட்டு வாழ்க்கை சற்றுச் சிக்கலானது போலத் தெரிகின்றது......." -இது அவனது இரண்டாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-

"தாயின் பிரிவு இவனைப் பெரிதும் பாதித்துள்ளது. எனினும், வேலைகளில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றான். தந்தை இவன் மீது அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் இவனது வீட்டு வாழ்க்கை இவனைப் பெரிதும் பாதித்துவிடக்கூடும்..." -இது அவனது மூன்றாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-

"தியடோர், பிதங்கியுள்ளான். பாடசாலை தொடர்பாக அதிக அக்கறை காட்டுவதில்லை. இப்போது இவனுக்கு அதிக நண்பர்கள் கிடையாது. சில நேரங்களில் வகுப்பில் நித்திரை கொள்வதுமுண்டு...." இது அவனது நான்காம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-

தியடோரின் கடந்த கால வாழ்க்கைக் குறிப்புக்களை வாசித்த திருமதி தோம்சன் அவன் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை நிலைமையை நன்கு விளங்கிக் கொண்டார். அந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து உள்ளூர வெட்கப்பட்டார். வேதனைப்பட்டார்.

நத்தார் காலத்தில் திருமதி தொம்சனின் வகுப்பு மாணவ மாணவியர்கள் அவருக்கு பரிசசுப்பொதிகளை கொண்டு வந்து கொடுத்தனர். தியடோர் தவிர ஏனைய பிள்ளைகள் யாவரும் தமது பரிசுப்பொதிகளை அழகிய வண்ணத் தாள்களில் வண்ண நாடாக்களால் கட்டிக் கொண்டு வந்திருந்தனர். தியடோர் கொண்டு வந்த நத்தார் பரிசுப் பொதி கசங்கிய பழைய பிரவுண் பேப்பர் துண்டில் சுற்றப்பட்டிருந்தது. அப்பொது அவலட்சணமாகக் காணப்பட்டது. ஏனைய பரிசுப்பொதிகளோடு, தியடோரின் பரிசுப்பொதியையும் திருமதி தொம்சன் விரித்துப் பார்த்தார். பழைய உலோக வளையலொன்றும், வாசனைத் தைலப் போத்தலொன்றும் அதனுள் காணப்பட்டன. போலிக்கற்கள் பதிக்கப்பட்ட அவ்வளையலில் இடையிடையே சில கற்கள் மட்டுமே அடங்கியிருந்தது. இதனைக் கண்ட வகுப்பு மாணவ மாணவியர்கள் தியடோரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். சிரித்துக் கேலி செய்யத்தொடங்கினர். வகுப்பு மாணவரை அமைதிப்படுத்திய திருமதி தொம்சன் "இந்த வளையல் நல்ல அழகாக இருக்கிறது. எனக்கு நிரம்ப பிடித்துக் கொண்டது." எனக் கூறி தனது புறங்கையிலும் மேனியிலும் சிறிதளவு வாசனைத்தைலத்தை தடவிக்கொண்டார். வகுப்பு எங்கும் வாசனை பரவியது. அன்று பாடசாலை விட்ட பின்னர் மற்ற மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறும்வரை காத்திருந்த தியடோர், தனது ஆசிரியையை நெருங்கி, "திருமதி. தொம்சன், இன்று நீங்கள் எனது தாயைப்போன்றே வாசனையாக இருக்கின்றீர்கள்..." என்று கூறிவிட்டு வெளியேறினான். அவனது கண்கள் பனித்திருப்பதை திருமதி. தொம்சன் அவதானிக்க தவறவில்லை. அவன் வகுப்பை விட்டு வெளியேறிச் சென்ற பின்னர் திருமதி, தொம்சன் நீண்ட நேரம் வரை தனியே அமர்ந்து இருந்து கண்ணீர் வடித்தார்.

அன்று தொடக்கம் அவர், தனது மாணவர்களுக்கு, வாசிப்பும், எழுத்தும், கணிதமும் சொல்லிக் கொடுப்பதை கைவிட்டார். மாறாக அவர் தனது வகுப்பு பிள்ளைகளுக்கு கற்பிக்க தொடங்கினார். திருமதி. தொம்சன், தியடோர் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தினார். அவனுடன் கருமமாற்றத் தொடங்கினார். தியடோர் படிப்படியாகப் புத்துணர்வு பெற்று வருவதை திருமதி.தொம்சன் அவதானித்தார். அவர் அவனை ஊக்குவித்த போதெல்லாம் அவன் சிறப்பான துலங்கலைக் காட்டினான். அவ்வருட இறுதியில் தியடோர் அவ்வகுப்பில் சிறந்த மாணவர்களுள் ஒருவனாக திகழ்ந்தான். தாம் "எல்லா பிள்ளைகள் மீதும் சமமாக அன்பு செலுத்துவதாக" வருட ஆரம்பத்தில் திருமதி தொம்சன் கூறியிருந்தார். ஆனால், இப்போது தியடோர் திருமதி தொம்சனின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக மாறியிருந்தான்.

ஒருவருடத்தின் பின்னர் திருமதி தொம்சனின் மேசை மீது ஒரு சிறிய கடிதம் காணப்பட்டது. அதில் அவன் பின்வரும் ஒரேயொரு வாக்கியத்தை மட்டும் எழுதியிருந்தான்.
"எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்"

ஆறு வருடங்களின் பின்னர், தியடோரின் இரண்டாவது கடிதம் திருமதி தொம்சனுக்கு கிடைத்தது. அதில் பின்வருமாறு அவன் எழுதியிருந்தான்.
"நான் இவ்வருடம் எனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டேன். வகுப்பில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."

மேலும் நான்கு வருடங்களின் பின்னர், தியடோரின் மூன்றாவதுகடிதம் திருமதி தொம்சனுக்கு கிடைத்தது. அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தது.
"பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்கல்வியை தொடர்கிறேன். விரைவில் சிறப்பு பட்டதாரியாக தேறவுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."

மேலும் நான்கு வருடங்கள் கழிந்த பின்னர், தியடோரிடமிருந்து மற்றுமொரு கடிதம் திருமதி. தொம்சனுக்கு கிடைத்தது. அதில் பின்வருமாறு அவன் எழுதியிருந்தான்.
"இளமானி சிறப்பு பட்டம் பெற்ற பின்னர், தொடர்ந்தும் படிக்க முடிவு செய்தேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."
இப்படிக்கு,
கலாநிதி தியடோர் எஃப். ஸ்டொடார்ட்.

கதை இந்த மட்டில் முடிந்து விடவில்லை. சில மாதங்களின் பின்னர் மேலுமொரு கடிதம் திருமதி.தொம்சனுக்கு கிடைத்தது. அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
"நான் ஒரு யுவதியை விரும்புகின்றேன் அவளை மணமுடிக்க தீர்மானித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது தந்தை இறந்துவிட்டார். திருமண தினத்தன்று மணமகனின் தாய்க்கென ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் தாங்கள் வந்து அமர வேண்டுமென வேண்டுகின்றேன்."

அந்த அழைப்பை திருமதி. தொம்சன் பெருமனத்துடன் ஏற்றுக்கொண்டார். திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார். எப்படி எனச் சிந்திக்கின்றீர்களா?

திருமண வைபவத்துக்குச் செல்லத் தயாரானார். இடையிடையே கல்விழுந்த அந்த உலோக வளையலை அணிந்து கொண்டார். திதடோரின் தாயார் பாவித்த அந்த வாசனைத் தைலத்தை மேனியில் தடவிக் கொண்டார். திருமண மண்டபத்துக்குச் சென்று மணமகனின் தாயாருக்காக ஒதுக்கப்பட்ட விசேட ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

திருமண மண்டபத்தில் திருமதி. தொம்சனும் தியடோரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது தியடோர் "நன்றி திருமதி. தொம்சன். என் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்... என்னை மதித்து, எனக்கு கணிப்பு வழங்கி. என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்கு ஏற்படுத்த முடியும் என எனக்கு உணர்த்தியதற்கு நன்றி..." என திருமதி தொம்சனின் காதில் வாயை வைத்து மெதுவாகக் கூறினான். திருமதி தொம்சன், கண்களில் நீர் மல்க, "அப்படியல்ல, தியடோர், என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்குக் கற்பித்தவர் நீங்கள் தான். உங்களைச் சந்தித்த பின்னர் தான், "எப்படிக் கற்பிக்க வேண்டும்" என்பதை நான் கற்றுக் கொண்டேன்" எனப் பதில் கூறினார்.

நன்றி: அகவிழி