"எங்கட வீட்டில நானும், அம்மாவும், அப்பாவும், தம்பியும், தங்கச்சியும் ரெண்டு பாயை விரிச்சுப் போட்டு பெட்சீட் எல்லாம் விரிச்சுப் போட்டு ஒண்டாய் தான் படுப்பம். விடிய கோப்பித்தண்ணி ஊத்திப் போட்டு அம்மா எங்கள எழுப்புவா. அப்ப, அப்பா கிணத்தடியில நிப்பார். பிறகு அம்மா எங்கள வெளிக்கிடுத்தி பள்ளிக்கூடம் அனுப்புவா. அப்பாண்ட சைக்கிள்ளை நாங்கள் மூண்டு பேரும் பள்ளிக்கூடம் போவம். அதுக்கு பிறகு அப்பா சந்தைக்கு யாவாரத்துக்கு போடுவார். பின்னேரம் அப்பா தான் கூட்டிக் கொண்டு வருவார் பள்ளிக்கூடத்தில இருந்து எங்களை.
ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கூடத்தில இருக்கேக்கை கிபிர் வந்து அடிச்சான். முதல்ல எங்கயோ அடிக்கிறான் எண்டு தான் நினச்சம். ஆனா பள்ளிக்கூடத்துக்கை ஒரு குண்டு வந்து விழுந்துச்சு. என்னக்கு மேல ஆற்றையோ கால் ஒண்டு வந்து விழுந்துச்சு. நான் அப்பிடியே வேலிக்கை போய் விழுந்தன். பிரண்ட்ஸ் பிள்ளையள் மூண்டு பேர் செத்துப் போச்சினம். ஆரோ சொல்லிச்சினம் எங்கட வீட்டுக்கையும் குண்டு விழுந்ததாம் எண்டு. தம்பியையும் தங்கச்சியையும் கூட்டிக் கொண்டு ஓடிப் போனன் வீட்டுக்கு. வீட்டைச் சுத்தி ஒரே சனம். என்னைக் கூப்பிட அம்மா வரேல்லை. அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது..
இரவில அம்மாக்கு பக்கத்தில ஆர் படுக்கிறது எண்டு சண்டை பிடிக்கிற தம்பியும் தங்கச்சியும் பிரமை பிடிச்சு நிண்டுதுகள். கொள்ளி வைக்கும் மட்டும் என்ட கண்ணுக்கை நாங்கள் எல்லாம் ஒண்டாய் படுக்கிறது தான் கண்ணுக்கை நிண்டுது. இனி நாங்கள் ஆரோடை படுக்கிறது எண்டு நினைக்க நினைக்க எனக்கு மயக்கம் வாற மாதிரி இருந்துச்சு......................."
It is a Kfir- Short film
Tuesday, March 11, 2008
அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது..
Posted by x-group at 12:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
8 உரையாடல்:
chek this links also
http://www.tamilnaatham.com/articles/2007/nov/parani/14.htm
http://www.tamilnaatham.com/articles/2007/nov/parani/25.htm
நன்றி
படிப்பதற்கே நெஞ்சம் கனக்கிறது. அந்த சூழலி இருந்தவர்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்த முடியும்.
:(
படிக்கும் போதே மனதை உருக்கிறது.. :(
இது போல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடைபெறிகின்றன. அவை எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவதை விட்டுட்டு இப்பவும் ஈழத்தில் இருந்து பலர் தேவை இல்லாத விடயங்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
மனசு கனத்தது.
கண்கள் பனித்தது.
இப்படி எத்தனையோ ஆயிரம் நடக்கிறது.
ஆனாலும் ஒவ்வொன்றையும் கேட்கும் போது மனம் கலங்குவதை தடுக்க முடியவில்லை.
மனம் கலங்குகிறது படிக்கும்போதே இப்படியிருந்தால்..அனுபவிப்பவர்களுக்கு..விடிவு காலம் விரைவில் வராதா?
//இது போல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடைபெறிகின்றன. அவை எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவதை விட்டுட்டு இப்பவும் ஈழத்தில் இருந்து பலர் தேவை இல்லாத விடயங்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.//
தேவையில்லாத விடயங்கள் எவை?
Post a Comment