Saturday, March 8, 2008

கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.

கொழும்பு பலகலைக்கழக விஞ்ஞான பீடம் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்(!?) சம்பந்தமாக தமிழரங்கம இணையத்தளத்தின் ஆசிரியரான இராயகரன் எமக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார். ரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். பல்கலைக்கழகம் சார்ந்த பல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குபற்றியவர்.தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) என்ற இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். 1986 ஆம் ஆண்டு காணாமல் போன மாணவன் விஜிதரன் விடயத்த்தில் அதை எதிர்த்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என அறிகின்றோம். அவ்வகையில் பல்கலைக்கழகத்தில் இருந்தவாறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மாணவன் கொழும்பு பல்கலைக்கழகம் விஞ்ஞானபீடம் பற்றி தெரிவிப்பதை கீழே பார்க்கலாம்.

அதற்கு முன் சில விடயங்களைக் கூற வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு மொரட்டுவ பலகலைக்கழக மாணவர் ஒருவர் கடத்தப்பட்டதாக அறிகின்றோம். ஆயினும் மாணவர்கள் எவரும் அது தொடர்பிலான தமது எதிர்வினைகளை ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மாணவர்களால், பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆயினும் பல்கலைக்கழகம் என்ற அளவில் தமக்குள் ஒன்றுபட்டாமலும் குறைந்தபட்சம் தமது நண்பர்களுக்காக எதுவும் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் இருப்பது கவலைக்குரியது. அதற்கும் மேலால் கொழும்பு பலகலைக்கழகத்தில் இனத்தின் துயரத்தை மறந்து படம் எடுப்பதில் தமது செயற்பாடுகளை வீணாக்குகின்றனர். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் தவிர மற்றைய அனைத்து பீடங்களும் கொஞ்சமாவது சமூக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர் என்பது அவர்களது செயற்பாடுகளில் இருந்து விளங்கக்கூடியதாக இருக்கின்றது. முகாமைத்துவ பீடம் மற்றும் சட்ட பீடம் போன்றவை அரங்கேற்றிய நாடகங்கள் சமூகத்தின் துயரம் பற்றியதே.

விஞ்ஞான பீட மாணவர்கள் பலர் எமக்கு மின்னஞ்சல் இட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக தமது பீடத்தை நாம் விமர்சித்ததை அவர்கள் ஏற்றுக்கொளவில்லை. ஒரு சில மாணவர்களின் தனிப்பட்ட நடத்தையின் காரணமாக அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம். ஒரு மாணவர், தனிப்பட்ட ரீதியில் இதில் பங்கு கொண்டவர்கள் மற்றும் இதில் பலாத்தகாரமாக பணம் சேர்க்கப்பட்டது தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வந்தார். பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மாதாந்த புலமைப்பரிசிலான 'மகாபொல' நிதி பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கறைப்படாத அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது பீடத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்பட்டுவிட்டது என கூறுவது எமக்கு அதிசயமாக உள்ளது.

ஒரு சில மாணவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவது என்பது எவ்வகையில் சரியானது எனக்கேட்கின்றோம். திரைப்படத்தை தயாரித்த மாணவர்களது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த பிரிவில் உள்ள மாணவர்கள் பலர் அவர்களுடன் இணைந்து நடப்பதில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறானா அராஜகங்கள் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முற்படும் ஒரு குழுவிற்கு ஆதரவாக பலர் எழுதுவதும் குரல் கொடுப்பதும் ஆரோக்கியமான சூழல் அல்ல.

மற்றும் மு. மயூரன் கூறியுள்ளது போல வீரகேசரி பேட்டியாளர் அவர்களை சில இடங்களில் நக்கல் அடித்ததை கூட உய்த்துணர முடியாதவர்கள பல்கலைக்கழகம் உற்பத்தி செய்துகொண்டிருப்பதென்பதன் ஆபத்தை சுட்டிக்காட்டவும் வேண்டும். ஒரு வேளை உணவுக்கு கூட வழியற்ற மக்கள் தாம் வாங்கும் பாணில் இருந்து தீப்பெட்டிவரை கட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தில் இலவசமாக கல்வி கற்பவர்கள், கல்வி கற்பதற்காக அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் நிதியை கட்டாயத்தின் பேரில் வசூலித்து அதனை பயன்படுத்தி இவ்வாறான மோசமான திரைப்படங்களை தயாரிப்பதன் உள்நோக்கம் தான் என்ன?

அத்துடன் மாணவர்கள் சார்பாக வெளியிடப்பட்ட கருத்து ஒன்றில் எக்ஸ் குரூப்பில் இது வெளியாவது தமக்கு அக்கறை இல்லை என்று சொல்கின்றார். விரைவில் எமது குழு இதன் தொகுப்பை தேசியப் பத்திரிகை ஒன்றிலும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிலும் வெளியிடுவதாக உத்தேசித்துள்ளது. அப்போது தமது தறுக்காக வருத்தப்படக்கூடும். மாணவர்களின் சமூக அக்கறை குறித்தான ஆய்வுக்காக வாசகர்கள் இது தொடர்பில் அக்கறை எடுத்து உங்களது உரையாடலைப் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்.

திரைப்படத்தின் Trailor இங்கே சென்று பார்க்கலாம்.
X-GROUP

இனி தோழர் ரயாகனது பின்னூடத்தைப் பார்ப்போம்.

கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.
விபச்சாரத்தை கலை என்பது எப்படி? போலித்தனங்களை, போலித்தனமான வாழ்வை, போலியாக நடித்து கடுட்வது விபச்சாரம் தான். எதிலும் உண்மை கிடையாது. உண்மையாக வாழ்தல் என்பது, அழகுணர்ச்சியற்றதாக எண்ணுகின்ற மனநிலையைத்தான், இந்த படம் கற்பிக்கின்றது.

போலித்தனத்தை உண்மையானதாகவும், அழகானதாகவும் காண்கின்ற, காட்டுகின்ற வாழ்க்கையை, வக்கிரமாக்கி அதைப் படமாக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிக்கொண்டு, சமூகத்தின் உதவியல் இலவசமாக கற்றுக்கொண்டு, சமூகத்திடமே உதவியைக் கோரிக்கொண்டு, சமூகத்துக்கே ஆப்பு வைக்கின்றனர். தம்மைப் போல் சமூகத்தையும் தம்முடன் சேர்ந்து விபச்சாரம் செய்ய படம் காட்டுவது கலையல்ல.

இந்தியா சினிமா என்பது, மனிதர்களின் வாழ்வை பிரதிபலிப்பவையல்ல. அது பாலியல் ஆபாசத்தை, தனிமனித வன்முறைத் துண்டிய படி, உலகமயமதால் லும்பன் பண்டபாட்டை சமூத்தில் நஞ்சாகவே இடுகின்றது. இந்தச் சினிமா கலையில் ஆன்மா என்பது, கவாச்சியும் ஆபாசமும் தான்.

இதற்கு வெளியல் இந்த பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனை மட்டம் வளரவில்லை என்பதை, அவர்களாக சொல்வதுதான் இந்தப் படம். இவர்கள் சமூகத்துக்கு எதையும் வழிகாட்ட முடியாத தற்குறிகள். அடிப்படையில் சமூக அறிவற்றவர்கள். சமூகத்துக்கு வெளியில் கற்பனையில், போலியாக காட்டி வாழ முனைபவர்கள்.

இந்தியா சினிமா கும்பபையைப் பின் பற்றி நிற்பது, சுய அறிவற்ற அடிமுட்டாள் தனம். சமூகத்தில் வடிகட்டப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்கள், அவித்துப் போட்டு நிற்கும் காட்சி தான் படமாக வெளிவருகின்றது. உண்மையில் இவர்கள் சொந்த மனவக்கிரம், வக்கிரமாகி வெளிப்படுகின்றது. இதையே அனைவருக்கும் என்கின்றது.

இவர்கள் ராக்கிங் செய்கின்ற போது எதை செய்கின்றனர் என்றால், இதைத் தான். அனைத்தையும் பெண்ணின் பாலியல் அங்கத்தின் ஊடாகத் தான், பெண்ணை கவர்ச்சியாக ஆபாசமாகக் காட்டித் தான், சொந்த தனிமனித வன்முறை ஊடாகத்தான், அனைத்ததை சொந்த சுயநலத்துடன் தான், நடைமுறையில் கையாளுகினர் அனுகுகின்றனர். இதைதான் மறுபடி படம் சொல்கின்றது.

இவர்கள் பல்கலைகழகத்தில் நடத்தும் ராக்கிங்கை, அதன் மனவிகரங்களைப் பற்றி படம் எடுக்கவே மடியாது. இவர்களின் சிந்தனை வட்டம் என்பதும், வாழ்வியல் முறை என்பதும், ஆபாசமும் வன்முறை கொண்ட தனிநபர் நலன் சார்ந்தது தான். இந்த குறுகிய தமது சொந்த சூத்தையை, அற்பத்தனத்துடன் படமெடுத்து காட்ட முனைகின்றனர்.

எதிர்கால அதிகார வர்க்கங்களின், சமூகத்தின் வழிகாட்டிகளின் சொந்த வக்காரம் என்பது, இப்படி மலிவான இழிவான நாடகத்தனங்கள் தான்.

இந்த மாதிரி வாழ்வதாக காட்ட முனையும் இவர்களின், சொந்த போலித்தனங்கள் தான் இவை. தமது சொந்தக் குடும்பம் இவர்களைக் படிப்பிக்கப்படும் கஸ்ரத்தை பேசுவதில்லை. அவர்களை சுற்றி நிகழ்கின்ற வாழ்வியiவை, அந்த சமூக நெருக்கடிகளைப் பற்றி பேசுவதில்லை. இதற்கு வெளியில் வாழ்வதாக பாசங்கு செய்வதே, இவர்களின் போலித்தனமாகி விடுகின்றது.

எதிர் காலத்தில் சாதி பார்த்து திருமணம், கொழுத்த சீதனம் வாங்கிய திருமணம், எப்படி பணக் கட்டுகளை சம்பதிக்கலாம் என்ற எல்லக்குள் தான், இவர்களின் சிந்தனை எல்லையே சுருங்கிக் கிடக்கின்றது.

இவர்கள் கட்டும் படம்; எது? கறுப்புக் கண்ணடி, தலை முடியையும் தாடியையும் விதவிதமாக அழகுட்டுவது, இயல்பற்ற நாலு துல்லல், போலியான தீமிரான வாய் வீரம், பல்லைக்கட்டும் போலித்தனம் பாலியல் கவாச்சியை அழகுட்டிய பெண்ணும், நீலிக் கண்ணிர் வடிக்கும் சோகம், போலியான மனிதபிமான காட்சிகள், என்று அனைத்தையும் போலியாக உருவமைத்து காட்டுவது தான் படமாகின்றது. இந்த போலியான சமூக உணர்வு, அது சார்ந்த சிந்தனை உணர்வு என்ற எல்யைத்தாண்டி, எதுவும் இதில் கிடையாது. எல்லாம் போலி.

4 உரையாடல்:

Anonymous said...

X-Group இற்கு எனது நன்றிகள். நான் கூறிய விடயங்களை புதிய பதிவில் சேர்த்துக் கொண்டமைக்கு.. ஆயினும் சில வகையான குறைகள் உங்களிடன் உண்டு. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்விரங்களையும் பணம் தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட விடயங்கள் பற்றிய புள்ளிவிபரத்தையும் நீங்கள் தவிர்த்து வருகின்றீர்கள். இதன் மூலம் உங்களால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதே எனது கருத்து. உங்களது பதிவிற்கு திரைப்படத்தயாரிப்பு குழுவிடமிருந்து ஏதாவது பதில் கிடைத்ததா? அப்படியெனில் நீங்கள் எவ்வாறு அவர்களைக் காப்பாற்ற முற்படலாம்?

தேசியப் பத்திரிகைகளிலும் ஆங்கிலப்பத்திரிகைகளிலும் இவ்விடயத்தை பிரசுரிப்பது மிகவும் நல்ல முயற்சி. அதன் மூலம் இனிமேலும் இவாறான விடயம் நடைபெறாமல் இருக்க பல்கலைக்கழகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அத்துடன் மகாபொல புலமைப்பரிசில் காசை பறித்த விடயத்தையும் தேசியப்பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அதன் மூலம் இனிமேலும் இவ்வாறான விடயங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெறாமல் தடுக்கலாம்.

நன்றி.
கொழும்பு பல்கலைக்கழ்க மாணவன்

Anonymous said...

x-க்ரொஉப் நல்லதொரு வேலை செய்யுது. ஆனால் பின்னூட்டம் இடுபவர்களோட தொல்லை தாங்க முடியல. பொக்கட்டுகுள்ள 2 1/2 லட்சடத்தை கொண்டு திரியினம் நல்ல படம வந்தா குடுப்பம் எண்டு.படம் எடுத்தவன் அந்த காச எப்பிடியோ எடுப்பாந்தானே? படத்தில என்ன குறை நிறை எண்டு கதையுங்கோவன்.

Anonymous said...

ஒரேவிதமான சிந்தனையை உடைய கூட்டம் ஒன்று சேர்ந்தது தான் இவ்வளவிற்கும் காரணமோ என எண்ணத்தோன்றுகின்றது. கொஞ்ச பேர் சேர்ந்து ஒரு பீடத்தின் பெயரையே நாறடித்து விட்டார்கள். இதில் என்ன சோகம் என்றால், அவர்களுக்கு அது எப்போதுமே விளங்காது என்பதுதான். கூட்டமாக இருந்து யோசித்து, இதைவிட கேவலமான விடயம் ஒன்றை மீண்டும் செய்வார்கள் என்பதை நாம் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

மாணவன்
கொழும்பு பல்கலைக்கழகம்

Anonymous said...

who ever making any comment, please write ur name as well. otherwise there is no point in it.