கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றை தயாரித்துத் திரையிட்டிருந்தார்கள். அது தொடர்பாக சில குறிப்புகளை வரையலாம் என்ற எண்ணம் இருந்த போதிலும் பொதுத்தளத்தில் கேவலமான விடயங்களை காட்சிப்படுத்துவதின் காரண்மாக அவை இன்னுமின்னும் வேகமான பரவலுக்குள்ளாகி தீய அதிர்வுகளை உண்டாக்க கூடும் என்ற பயத்தின் காரணமாக இது பற்றிப் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். ஆயினும் ஒரு சில வாரங்களில் அது தொடர்பான விடயம் ஒன்றை வீரகேசரியில் கண்ட போதும் எதிர்வினையாற்ற எண்ண்யிருந்தோம். ஆயினும் அதனையும் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.
இன்று இணையத்தில் இத்திரைப்படத்தை முன்வைத்து ஊரோடி பகீ பிச்சை எடுக்க முற்படுகின்ற இவ்வேளையில் இது தொடர்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்க்குத் தள்ளப்படவேண்டியதாயிற்று.
கொழும்பு பல்கலைக்கழகம் நூற்றாண்டுகால சிறப்பை தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான சமூக ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. சமூகத்தளத்தில் கொழும்பு பலகலைக்கழகத்தின் மிகப்பெரியது. பல்வேறுவகையான சமூக ஆர்வலர்களை உற்பத்திக்களமாகவும் விளங்கியது.
இலங்கையில் மார்க்சிய இயக்கங்களில் ஆரம்பித்து போராட்ட இயக்கங்கள் வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காலத்தின் சாட்சியாக இருந்தார்கள். ஈழத்தின் புதுக்கவிதை முன்னோடி முருகையன் இது பற்றி அழகாகச் சொல்லுவார். தாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் பற்றிய விடயங்களை. அப்போது கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் இருந்தது. அதன் பின்னர் ஜே.வி.பி புரட்சி மையம் கொண்ட 70 களில் கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து பல விதமான புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கணிசமான அளவினர் தமிழ் மாணவர்களே. ஆரம்பத்தில் கருத்தியல் அளவில் உள்வாங்கப்பட்ட மார்க்சியம் பின்னர் பல்கலைக்கழகங்களை முன்வைத்து புரட்சிகர செயற்பாட்டு இயக்கங்களாக வளர்ச்சி பெற்றது. அவ்வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. அதிலும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் இது தொடர்பாக பரந்த அளவில் தன்னை ஈடுபடுத்தியதும் அதில் தமிழர்கள் கணிசமான அளவானோர் என்பதும் வரலாறு.
தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்ற காலங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவை தொடர்பான கலந்துரையாடல்கள் பல்வேறுவகைப்பட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. தெற்கில் இருந்த மாணவர்கள் வடக்கில் இருந்த மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி அவை தொடர்பாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் தம்மை போராளிகளாக இணைத்துக் கொண்டு போராட்டத்தில் நேரடியாகவே பங்குபற்றினர்.
புளொட் இயக்கத்தின் உள்விவகாரங்களை வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முக்கியமான அரசியல் படைப்பான புதியதோர் உலகம் என்பதை எழுதியவர் பிற்காலத்தில் கோவிந்தன் என அறியப்பட்ட நோபேட் கொழும்பு பல்கலைக்கழக மாணவனே.
புதியதோர் உலகம் முன்னுரையில் இருந்து சில விடயங்கள்..
...இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார்...
தமிழ்த்தேசிய எழுச்சியின் பிற்பட்ட காலங்களிலும் கோவிந்தன் போன்று புலிகள் அமைப்பிலும் பல கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வேலை செய்தனர். இயக்க அரசியலில் ஈடுபட விருப்பமற்ற மாணவர்கள் அது தவிர்த்து சமூக அபிவிருத்தி இயக்கங்க்ளில் ஈடுபட்டனர். ஆயினும் 90 களின் பிற்பகுதி தெற்கில் வாழும் மாணவர்களை இன அடையாளம் சார்ந்து செயற்பட முடியாத நிலமைக்கு உள்ளாக்கியது. சமூகம் சார்ந்து செயற்பட முடியாத நிலைக்கும் இன ஒடுக்குதலுக்கு உள்ளாகிய மாணவர்கள் தம்மால் இயன்றவரை தமது அடையாளம் சார்ந்த பிரக்ஞையின் காரணாமாக அடையாள பேணுகையை மேற்கொண்டனர்.
தமிழ்விழா போன்ற பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஊடாக தமது குறைந்தபட்சமான குரலை ஒலிக்கச்செய்தனர். மொரட்டுவ பல்கலைக்க்ழகம், பேராதனிய பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்ழகம் மற்றும் சப்பிரகமுவ பல்கலைக்கழகம் போன்றவை இவற்றில் முக்கியமானவை. முக்கியமாக நாடகங்கள் மூலமாக தமது ஈனக்குரலை வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றனர். சில வருடங்களுக்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகம் தமது வருடாந்த கலைநிகழ்ச்சியூடாக டக்ளஸ் தேவானந்த அவர்களை கடுமையாக வசைபாடியது. கேலியான நடிப்பினூடாக மாணவரொருவர் அருமையாக அதனை வெளிப்படுத்தியிருந்தார். கொழும்பைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து இயங்குவதன் கடினத்தை நாம் அறிவோம். ஆயினும் எங்கிருந்தாவாது வரும் ஒரு சில குரல்களுக்காவது எமது ஆதரவை எழுத்து மூலமாகவாவது தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கொழும்பு பல்கலைக்கழகமும் தமது வருடாந்த நிகழ்ச்சிகளை இவ்வாறான முறையில் தொடர்ச்சியாக செய்து வந்தது. வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்தத்தினால் ஏற்படும் துயரங்களை வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தம்மால் இயன்ற அளவில் பதிவுசெய்தனர். மற்றும் வர்த்தக நோக்கில் பொதுப்புத்தியை அவமதிக்கும் நோக்கில் தயாரிக்கப்டும் சினிமா மற்றும் நாடகம் போன்ற்வற்றிற்கு மத்தியிலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை வலுப்படுத்தும் நோக்கிலான படப்புக்கள் இன்றும் அழிந்து போகாமல் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாக பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இறுதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூத்து பற்றியதான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த வேளை கலை தொடர்பாக மாணவர்களிடத்தில் எஞ்சியிருக்கும் நினைவுகள் நம்பிக்கையளிக்க கூடியவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அயினும் அதன் பின்னர் ஒரு குழுவினர் தென்னிந்திய சினிமாப் பாணியில் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினர். பாலியலை மையாமாக்கிய ஆணாதிக்க சொல்லாடல்களினூடான பகிடிகள் மூலம் பகிரங்கமான மேடையில் மாணவ சமூகத்தால் அரங்கேற்றப்பட்டது. அவர்கள் தமது அசைவுகளையும் சொற்களையும் வர்த்தக சினிமாவில் இருந்து பெற்றுக்கொண்டனர். பார்வையாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்த வகையிலானதாக அவர்களின் வெளிப்படுதிறன் அமைந்திருந்தது. இம்மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் என அறியக்கிடைத்தது.
அதன் பின், நடந்த இன்னுமொரு விழாவில் திரைப்படம் ஒன்று மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. முந்தய விழாவைக் கேவலப்படுத்திய அதே குழுவினராலேயே இம்முறை இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டதாக அறிந்தோம். அக்குழுவினர் வழமையாக இதேவிதமான நாடகங்களை மேடையேற்றுவதாகவும் அதன் உச்சக்கட்டம் தான் இத்திரைப்படம் எனவும் அறியக்கிடைத்தது. இங்கு மாணவரின் கேளிக்கை உணர்வினை விமர்சிப்பது எமது நோக்கமல்ல. ஆயினும் வர்த்தக நோக்கிலான கலைவடிவங்களே மக்கள் சார்பானவை மக்களுக்கானவை சமூக மயமானவை சமூக யதார்த்ததளத்தில் அமையப்பெற்றவை எனும் மாயை கட்டமைக்கப்படுவதையும் அதன் தொடர்ச்சியான போக்கிலான அபாயத்தினையும் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கமாகின்றது.
தென்னிந்திய சினிமா வின் நேரடியான தாக்கத்துக்கு உட்பட்ட கேவலமான சமூகக்குழு ஒன்றிடம் இருந்து இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறென்பது விளங்கியதாலேயே இவ்விடயம் பற்றி நாம் அதிகம் அக்கறை எடுக்கவில்லை. இக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 ஆம் வருட மாணவர்களாவார்கள். இதற்கு முந்தைய பிரிவினர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்ல என சிரேஸ்ட மாணவர்கள் தரப்பில் தெரிவீக்கப்பட்டது. ஆயினும் இம்மாணவ குழுவுக்கு கீழே புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களையும் இவ்வாறான மனநிலை தயாரிப்புக்கு இம்மாணவ குழு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவைச் சேர்ந்த பல மாணவர்களின் விருப்பமின்றி ஒரு சிலரே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினரது ஒத்துழைப்புடன் கூட்டாகவே எடுக்கப்பட்டதாக அறிகின்றோம்.
தமிழ்மணம் வாசகர்களே,
நீங்கள் இப்படத்துண்டைப் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து இத்திரைப்படம் பற்றியும் இதன் தயாரிப்பாளர்கள் பறியுமான ஊகம் ஒன்றிற்கு வந்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியில் இருந்து இவ்வாறான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டதை நினைத்து நீங்கள் வருத்தப்படக்கூடும். அதுவும் வியாபார நோக்கத்திற்காக அன்றி மாணவர் குழு ஒன்று இவ்வாறான கேவலமான திரைப்படம் ஒன்றை தயாரித்து தமது கேவலமான மனநிலையையும் சமூக அக்கறையையும் எல்லோருக்கும் வெளிக்காட்டி உள்ளார்கள். இத்திரைப்படம் தொடர்பாக உதவும் எண்ணமுள்ளோர் உங்கள் எண்ணத்தை மாற்றி இவ்வாறான மோசமான திரைப்படங்கள் இனிமேலும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் உதவுமிடத்து நாளை இதுவே தவறான முன்னுதாரணமாகி பல்வேறு திரைப்படங்களின் வருகையைச் சாத்தியமாக்கிவிடக்கூடும். நீங்கள் வழங்க நினைக்கும் பணத்தை வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழங்குவதன் மூலம் உங்களது நல்லெண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஊரோடி பகீக்கு,
இவ்வாறான தவறான விடயங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பை இழக்கிறீர்கள். அறிமுகம் என்பதற்கு அப்பால் ஒருவித பிச்சை எடுக்கும் மனநிலையை உங்களது பதிவு எமக்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக கவனமெடுக்குமாறு வேண்டுகின்றோம்.
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட தமிழ்ச்சமூகத்திற்கு,
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றதா? இவ்வகையான விடயங்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்பதை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். பல்கலைக்கழகங்க வளாகங்களுக்குள் நடைபெறும் விடயங்கள் பொதுச்சமூக வெளிக்கு வரும்போது அது தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தப்படும். நீங்கள் பொது வெளியில் இவ்வாறானதொரு விடயத்தை அனுமதிப்பதன் மூலம் சமூக பொதுவெளியில் உங்களது நற்பெயரை இழக்கின்றீர்கள். இது தொடர்பாக உங்களது கருத்தைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.
இவ்வாறான மாணவர்களின் செய்கைக்கு காறித்தூப்புவதினூடாக இவ்வாறான விடயங்கள் மேலும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம்.
ஊரோடியின் பதிவைப் பார்வையிட...
இங்கே 'கிளிக்' செய்யவும்.
X-GRP
Wednesday, March 5, 2008
கொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.
Posted by x-group at 12:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
27 உரையாடல்:
Click the link below to read the article(Virakesari) about this film.
http://i273.photobucket.com/albums/jj202/pubpic/28_10_2007_013_001.jpg
அய்யோ அய்யோ!!!
முடியலப்பா!!!
உந்த படத்த பார்த்த எனக்கு மூனு நாளா கய்ச்சல்!!
உதுக்கு 250,000 செலவு எண்டு பீலா விடுறாங்கள்!!!
உப்பிடிப்பட்ட சரக்குகளை மக்கள் மறுத்தால்தான் பல்கழைகழக மாணவர்களது மானம் காக்கபடும்!!!!
நீங்க தான் அந்த குரூப்பா..?
fucking x-group guys!!!
do u know e pain of the hardwork done for this film???
dont be to genious to comment on our product!!!
எக்ஸ் குரூப் உங்கள் கட்டுரைக்கான எதிர்வினையாகப் பலவற்றைச் சொல்லவேணும்.என்றபோதும,; இப்போதைக்கு எதுவுமே சொல்ல மனதுக்கு முடிவதில்லை.சலிப்பு!சூழ்நிலையின் விழை(ளை)வு இது!எதிரிகளின் பற்பல வியூகத்தில் பல்கலைக்கழகமும் உள்ளடங்குகிறது.அங்கே உருப்பெறுவதைத் தமது கருத்துக்களுக்கு-அரசியலுக்கேற்றபடி உருவாக்கும் விதையை இளையவரிடம் ஊன்றுவது நடைபெறுகிறது.ஒரு கையாலாகாத-ஜந்திரத்தனமானவொரு படிப்புக்கூட்டத்தை உருவாக்குவதைத் தவிர வேறொன்றை அவர்கள் அநுமதிக்க மறுப்பதன் தொடர்ச்சியாக இது நடைபெறுகிறது.இத்தகைய மாணவர்களின் பின்னே மறைந்திருக்கும் வலுக்கரங்களை இனம் காணுவதே இன்றைய தேவை!இத்தகைய சூழ்ச்சிகளைச் சாதாரண மக்கள் மத்தியில்-குறிப்பாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்தில்-தினமும் கட்டவிழ்த்துவிட்டபடி ஒரு தலைமுறையையே கேவலமாக உருவாக்கியுள்ளது இலங்கை இராணுவச் சர்வதிகாரம்.இதன் தொடர்ச்சியை இப் பல்கலைக் கழகங்களுக்குள் இனம் காணத் தக்கதாக இருக்கிறது.இவை அனைத்தும் இளையவர்களை தமிழ் உணர்விலிருந்தும்-தனித் தேச அபிலாசையிலிருந்தும்,போராட்ட மனதை நோக்கிய கருத்தியல் யுத்தம்.இதை இலங்கையோடு கைகுலுக்கும் பிற தேசங்களும் மிகக் கவனமாக அடியெடுத்துக்கொடுத்தபடி செய்து வருகிறார்கள்.இதை எப்படித் தடுப்பது?
அரசியல் வேலைதிட்டத்தால்?
இல்லை!
அப்போ?
பல்கலைக்கழக மட்டத்தில் இளைஞர்களே தமது நிலையை இனம் காணும் கருத்தியல் போராட்டத்தால் நிச்சியம் வென்றெடுக்க முடியும்.இனவிடுதலை குறித்த மிக நேர்த்தியான-உறுதியான கருத்தியற் பார்வையால் இவற்றை வென்றிடலாம்.முடிந்தால் அப் பல்கலைக் கழக இளைஞர்களின் பின்னே மறைந்திருக்கும் உந்துதல் எங்கே வேர் பரப்பியுள்ளதென்பதை முதலில் இனம் காணுவது முக்கியம்.இத்தகைய இனம் காணலில் அவை தட்டுப்படாது போயினும் அதன் காத்திரமான வியூகத்தைப் புரியும் தரணத்தில் அதை எதிர்கொள்ளும் தகமையும்-இலக்கும்-வியூகமும் நமக்குள் உருவாகும்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஸ்டம் எண்டு தெரியுமாடா உங்களுக்கு நாய்களே!?
ஆம்பிளையளெண்டா சொல்லுங்கடா பாப்பம் நீங்கள் ஆரெண்டு?
மாணவ அமைப்புக்கள் பல சமூக மாற்றங்களில் அபரிதமான பங்கை ஆற்றியிருக்கின்றன. ஆயினும் நீங்கள் சொல்வது போன்று கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் இவ்வாறான நிலைமைக்கு சென்றதையிட்டுக் கவலைப்படுகின்றேன். 10, 11 வருடங்களுக்கு முன்னர் நானும் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் ஒரு மாணவனாயிருந்தேன். அவ்வேளைகளில் நாம் பல விடயங்கள் தொடர்பாக உரையாடியாதாக நினைவு. தமிழ் சினிமாவை நாம் ரசித்தாலும் இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போய்விடவில்லை. முன்பெல்லாம் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் என பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். ஆயினும் இனிமேல் அப்படி சொல்லிக்கொள்ள முடியாது போலிருக்கிறது.
மேற்கூறிய தளத்தில் Student activism சம்பந்தமான சில குறிப்புக்களைக் காணலாம்.
http://www.commonaction.org/SocialChangeGuide.pdf
http://www.actionforchange.org/getinformed/history.html
இந்தப்படத்தின் முன்னோட்டத்தைப்பார்த்தவுடன் தோன்றிய கருத்துக்களை ஊரோடி பகீ யின் வலைப்பதிவில் சொல்லிவிட்டேன். அதற்கு மேலதிகமாகச் சொல்ல நினைப்பவற்றை மட்டும் இங்கே உரையாடலுக்கு முன்வைக்கிறேன்.
எனக்கு முன் இங்கே பின்னூட்டமிட்ட இரு நண்பர்கள் கோபப்பட்டிருக்கிறார்கள்.
தங்கள் உழைப்பை இவ்விமர்சனம் கேவலப்படுத்துகிறது என்று கோபப்பட்டிருக்கிறார்கள்.
படத்தை உருவாக்கிய அன்பர்களுக்கு,
திரைப்பட உருவாக்கத்தின் கள வேலைகள் எவ்வளவு உழைப்பைக் கோரும், சிரத்தையைக் கோரும் விஷயங்கள் என்பதை அனுபவ ரீதியாக நான் அறிவேன்.
தயாரிப்புக்கு முன்னான, பின்னான கடமைகள் மிகுந்த பளு வாய்ந்தவை.
இந்த உழைப்பினை நீங்கள் இப்படைப்பின்மீது செலுத்தியிருக்கிறீர்கள்.
தொழிநுட்பத்தேர்ச்சியை தேடிப்பெற்றிருக்கிறீர்கள்.
ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறையின் படைப்பாளிகளுள் ஒருவரான ஞானதாஸ் இந்தப்படம் பற்றி என்னுடன் உரையாடியபோது, அவர் தெரிவித்த பலவற்றுள் ஒன்று, படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதாகும்.
ஆக, நீங்கள் ஏதோவொன்றைச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்ல, ஒரு திட்டப்பணியை சிரத்தையாய்ச் செய்துமுடிக்கும் ஆற்றல் இளைஞர்களிடம் மங்கிக்கொண்டுவரும் இன்றைய புறநிலைகளுள் நின்றுகொண்டு அழகாக எடுத்த காரியத்தை முடித்திருக்கிறீர்கள்.
அது பாராட்டுக்குரியது.
அப்படியானால் உங்கள் படைப்பு பலவீனமாகும் இடம் எது?
தமிழர்கள் பெரிதும் போற்றும், மிகப்பிரபலமான அண்மைய பாடல் ஒன்றை நிகழ்ச்சி ஒன்றில் போடுகிறீர்கள். இதுதான் இன்றைய புதிய தமிழ்ப்பாடல், தரமான பாடல் என்று பிறமொழி நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறீர்கள். அங்கே இருந்த சிங்கள நண்பர்களில் சிலர் இந்தப்பாடல் பத்து வருடங்களுக்கு முன்னர்வந்த சிங்களப்பாடல் ஒன்றின் "கொப்பி" என்று அந்த இடத்தில் நிரூபித்தால் உங்கள் நிலை என்னவாகும்?
உங்கள் பட முன்னோட்டத்தை முழுவதுமாக பார்த்து முடிக்குமுன்னரே மேலே சொன்ன சூழலில் எழக்கூடிய கூச்ச உணர்வு உடல்முழுதும் பரவியது.
இந்த எடுத்துக்காட்டு புரியும் என்று நினைக்கிறேன்.
எனக்குப் பல்கலைக்கழகமொன்றில் கற்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.
வெளியில், தொழில்வழங்குனர்களிடத்திலும் சரி, சமூகத்திலும் சரி, அறிவுஜீவிகளிடத்திலும் கூட பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் உருவாகும் மனப்படிமம் என்ன தெரியுமா?
நீங்கள் எவ்வளவுதான் பெரும்பணிகளைச்செய்தாலும், பல்கலைக்கழகமொன்றோடு உங்களை அடையாளப்படுத்தும்போதுதான் அது பரந்த அங்கீகாரத்தைப்பெறுவது ஏன் தெரியுமா?
பல்கலைக்கழகம், ஒரு முறையியலின் அடிப்படையில் ஆழமான கற்றலை செய்யத்தக்க பயிற்சியையும் அடிப்படையையும் உங்களுக்கு வழங்குகிறது என்று நம்பப்படுவதால்.
பல்கலைக்கழகம் நீங்கள் வாழும் சமூகம் பற்றிய, அதன் விஞ்ஞானம் பற்றிய பரந்த ஆய்வினைச்செய்யக்கூடிய அடித்தளத்தை உங்களுக்குப் போட்டுவிடுகிறது என்று நம்பப்படுவதால்.
பலகலைக்கழகம் உங்களை முன்னோக்கிச்சிந்திக்க, நாட்டு மக்களுக்கு நன்மைதரக்கூடியவற்றைச்சிந்திக்க, மக்களை முன்னோக்கி அழைத்துச்செல்லக்கூடியனவற்றை சிந்தித்து, ஆய்ந்து கண்டுபிடிக்க உங்களைப் பயிற்றுவித்திருக்கிறது என்று நம்பப்படுவதால்.
பொழிப்பாக, நீங்கள் "அறிவாளிகள்" என்று நம்பப்படுவதால்.
நீங்கள் சின்னப்பெட்டைகளோ, சின்னப்பெடியன்களோ அல்ல.
நீங்கள் வெளியிலிருக்கும் சமூகத்தை விட மேம்பட்டவர்களாக, அவர்களை அறிவுரீதியாக வழிகாட்டுவதற்காக பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
நீங்கள் அந்த மக்களுக்கு ஆரோக்கியமானவற்றைப்படைத்தளிக்கவேண்டும். அது உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு.
அந்தக்கடமையை நீங்கள் சரிவரச்செய்திருக்கிறீர்களா?
மக்களை அவர்கள் அறியாமல் மாயவலைகளுக்குள் அமிழ்த்தி வைத்திருக்கும் சுயநல வணிகச் சதிகளை இனங்காணமுடிவதுதானே அறிவு?
நீங்கள் "பல்கலைகழக" மாணவர்கள் இல்லையா?
அந்த சுயநலவணிகச்சதிவலையில் நீங்களே அமிழ்ந்துபோய், வணிகக்குப்பைகளாக, சமூக நஞ்சுகளாகப்பரவிக்கிடக்கும் கலைவடிவங்களுக்குள் நீங்களே மயங்கிப்போய், ஆண்டாண்டுகாலமாக அசையாமல் தேங்கி நிற்கும் தென்னிந்திய சினிமாச் சட்டகங்களை கேள்விகணக்கற்று உள்வாங்கி, சமூக விரோதச் சிந்தனை வடிவங்களை பிரக்ஞை இல்லாமல் புலம்பி, ஒப்பித்து, தேய்ந்த இறுவட்டையே மீண்டும் மீண்டும் சுழற்றி ஒரு படம் எடுத்துப்படைப்பீர்களானால், அது எரிச்சலைத்தருமா இல்லையா?
வணிகக்குப்பைகளை ஏதோ தொலைக்காட்சிக்கடைவிரிப்புக்காக யாரோ சிலர் "பண்ணி" வெளியிட்டு காசுபார்த்துப்போனார்களாயின் அது வேறு விடயம்.
இந்தக்கலைவடிவமும், இதன்மூலம் மக்கள் மனங்களில் திணிக்கப்படும் சட்டகங்களும் கருத்துக்களும், சிந்தனை முறையும், சமூக நசிவுக்கே வழிகோலும் என்பதை உய்த்துணரக்கூடச்சக்தியற்று, வணிகக்குப்பையை தோண்டி எடுத்து அதனை நீங்களும் அபிநயம்பிடித்து வைத்தால், கோபம் வருமா இல்லையா?
இதற்காகவா உங்களைப்படிப்பிக்க மக்கள் வரிப்பணம் கொடுக்கிறார்கள்?
இந்த இரண்டரை லட்சத்தை ஏன் செலவழித்தீர்கள்?
தென்னிந்திய சினிமாவின் வசனங்களையும் காட்சிகளையும் அப்படியே வெட்டி ஒட்டி அபிநயம்பிடித்து மக்களுக்குக்காட்டவா?
"பொழுதுபோக்கு", "பல்கலைக்கழக வாழ்க்கை' என்று வீரகேசரிப் பேட்டியில் பினாத்தியபோது, பேட்டியாளர் உங்களை நாசூக்காக நக்கலடித்ததைக்கூட உணரமுடியாதவர்களாகிப்போனீர்கள்.
இலங்கையின் தேசியப்பிரச்சினை பற்றி படமெடுக்க வேண்டாம். மக்கள் விடுதலை பற்றியும் படமெடுத்து புரட்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.
மக்களுக்கு கருத்தெதையும் கூடச் சொல்ல வேண்டாம்.
இந்த சமூகம் சிக்கித்தவிக்கும் போலிக்கலைவடிவங்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான படைப்பொன்றைக்கூடவா - அது நகைச்சுவைப்படைப்பாகவே இருந்துவிட்டுப்போகட்டும் - செய்ய முடியாமற்போனது?
ஈழத்தில் வெளிவரும் தரமான தமிழ் சிங்களப்படங்களைக்கூடவா உங்களால் தேடியெடுத்துப்பார்க்க முடியாமற்போனது? நீங்கள் உருவாக்க வேண்டிய படைப்பின் இடமும் தேவையும் வடிவமும் என்ன என்பதைக்கூடவா உங்களால் தேடியுணர்ந்துகொள்ள முடியாமற்போனது? இதற்குத்தானா ஆய்வு முறையியலெல்லாம் உங்களுக்குச்சொல்லிக்கொடுத்தார்கள்?
படைப்பு என்றால், இருக்கிற குப்பையை அபிநயம் பிடிப்பதல்ல. புதிதாக, புதுமையாக எதையாவது செய்வது.
அதையாவது செய்யப்பாருங்கள்.
சமூகத்திடம் உதவி கேட்பதானால் அதற்கு அருகதைகள் வேணும். அதுபற்றி பகீயின் பதிவில் சொல்லிவிட்டேன்.
எதிர்நிலை விமர்சனங்களுக்கு கோபப்படாமல் காதுகொடுங்கள்.
உங்கள் அடுத்த படைப்பு ஆரோக்கியமானதாக, புதியதாக, தரமானதாக அமைய வேண்டும் என்ற ஆவலும் எதிர்பர்ப்பும் அவற்றின் பின்னே ஏங்கிக்கிடக்கக்கூடும்.
//ஆம்பிளையளெண்டா சொல்லுங்கடா பாப்பம் நீங்கள் ஆரெண்டு?//
எக்ஸ் க்ரூப் ஆண்கள்தான் என்று அப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கு வரக் காரணம் என்ன என்று அறியலாமா?
எக்ஸ் க்ரூப் சில பெண்களால் நடத்தபடுவதாக அறிகிறேன். கவனம். உண்மையாக இருந்துவிடப்போகிறது ;-)
OOps!!!!!After seeing the film i felt that this is the most worst effort so far from the university students i guess, and they should be ashamed for this.I too have heard of the heroic attempts of the past colombo university students and i thank x-group for highlighting this in the article.
dear students...oh bravo..!stay cool guys and please stop your heroic efforts for a while...
That was a good effort done by Colombo University Science Faculty students. Please do not try to interfering politics with the arts. Science faculty guys have done their best. I don’t know why you all are blaming them, after long time we have seen a tamil film from Srilanka. Give them some more support or else please shut up your mouth and let them to do their best.
They do not understand these thoughts
/That was a good effort done by Colombo University Science Faculty students. Please do not try to interfering politics with the arts. Science faculty guys have done their best. I don’t know why you all are blaming them, after long time we have seen a tamil film from Srilanka. Give them some more support or else please shut up your mouth and let them to do their best./
இதுதான் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் மனநிலை. கலையையும் அரசியலையும் கலக்க வேண்டாம் என்கிறார்கள். இந்த திரைப்படத்தை கலை(!!?) வடிவம் எண்டு சொல்கிறார்கள் போலிருக்கு. எங்களை ஒண்டும் செய்யாமல் வாயை மூடட்டாம். விஞ்ஞான குஞ்சுகளின் அறிவு இவ்வளவு தான். பெரிய தமிழ்ப்படம் தயாரிச்சிட்டாங்கள் அதைப்ப் பாக்கட்டாம்.
Srilanka வில இருந்து நீலப்படம் தயாரியுங்கோ Srilanka வில இருந்து நீலப்படம் வந்திருக்கு எண்டு நாங்கள் எல்லாரும் வந்து பாக்கிறம்.
விளக்கம் குறைஞ்ச தம்பியவை போய் மண்டையை கழுவுங்கோடா..
கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல
விபச்சாரத்தை கலை என்பது எப்படி? போலித்தனங்களை, போலித்தனமான வாழ்வை, போலியாக நடித்து கடுட்வது விபச்சாரம்; தான்;. எதிலும் உண்மை கிடையாது. உண்iமாக வாழ்தல் என்பது, அழகுணர்ச்சியற்றதாக எண்ணுகின்ற மனநிலையைத்தான், இந்த படம் கற்பிக்கின்றது.
போலித்தனத்தை உண்மையானதாகவும், அழகானதாகவும் காண்கின்ற, காட்டுகின்ற வாழ்க்கையை, வக்கிரமாக்கி அதைப் படமாக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிக்கொண்டு, சமூகத்தின் உதவியல் இலவசமாக கற்றுக்கொண்டு, சமூகத்திடமே உதவியைக் கோரிக்கொண்டு, சமூகத்துக்கே ஆப்பு வைக்கின்றனர். தம்மைப் போல் சமூகத்தையும் தம்முடன் சேர்ந்து விபச்சாரம் செய்ய படம் காட்டுவது கலையல்ல.
இந்தியா சினிமா என்பது, மனிதர்களின் வாழ்வை பிரதிபலிப்பவையல்ல. அது பாலியல் ஆபாசத்தை, தனிமனித வன்முறைத் துண்டிய படி, உலகமயமதால் லும்பன் பண்டபாட்டை சமூத்தில் நஞ்சாகவே இடுகின்றது. இந்தச் சினிமா கலையில் ஆன்மா என்பது, கவாச்சியும் ஆபாசமும் தான்.
இதற்கு வெளியல் இந்த பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனை மட்டம் வளரவில்லை என்பதை, அவர்களாக சொல்வதுதான் இந்தப் படம். இவர்கள் சமூகத்துக்கு எதையும் வழிகாட்ட முடியாத தற்குறிகள். அடிப்படையில் சமூக அறிவற்றவர்கள். சமூகத்துக்கு வெளியில் கற்பனையில், போலியாக காட்டி வாழ முனைபவர்கள்.
இந்தியா சினிமா கும்பபையைப் பின் பற்றி நிற்பது, சுய அறிவற்ற அடிமுட்டாள் தனம்;. சமூகத்தில் வடிகட்டப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்கள், அவித்துப் போட்டு நிற்கும் காட்சி தான் படமாக வெளிவருகின்றது. உண்மையில் இவர்கள் சொந்த மனவக்கிரம், வக்கிரமாகி வெளிப்படுகின்றது. இதையே அனைவருக்கும் என்கின்றது.
இவர்கள் ராக்கிங் செய்கின்ற போது எதை செய்கின்றனர் என்றால், இதைத் தான். அனைத்தையும் பெண்ணின் பாலியல் அங்கத்தின் ஊடாகத் தான், பெண்ணை கவர்ச்சியாக ஆபாசமாகக் காட்டித் தான், சொந்த தனிமனித வன்முறை ஊடாகத்தான், அனைத்ததை சொந்த சுயநலத்துடன் தான், நடைமுறையில் கையாளுகினர் அனுகுகின்றனர். இதைதான் மறுபடி படம் சொல்கின்றது.
இவர்கள் பல்கலைகழகத்தில் நடத்தும் ராக்கிங்கை, அதன் மனவிகரங்களைப் பற்றி படம் எடுக்கவே மடியாது. இவர்களின் சிந்தனை வட்டம் என்பதும், வாழ்வியல் முறை என்பதும், ஆபாசமும் வன்முறை கொண்ட தனிநபர் நலன்; சார்ந்தது தான்;. இந்த குறுகிய தமது சொந்த சூத்தையை, அற்பத்தனத்துடன் படமெடுத்து காட்ட முனைகின்றனர்.
எதிர்கால அதிகார வர்க்கங்களின், சமூகத்தின் வழிகாட்டிகளின் சொந்த வக்காரம் என்பது, இப்படி மலிவான இழிவான நாடகத்தனங்கள் தான்.
இந்த மாதிரி வாழ்வதாக காட்ட முனையும் இவர்களின், சொந்த போலித்தனங்கள் தான் இவை. தமது சொந்தக் குடும்பம் இவர்களைக் படிப்பிக்கப்படும் கஸ்ரத்தை பேசுவதில்லை. அவர்களை சுற்றி நிகழ்கின்ற வாழ்வியiவை, அந்த சமூக நெருக்கடிகளைப் பற்றி பேசுவதில்லை. இதற்கு வெளியில் வாழ்வதாக பாசங்கு செய்வதே, இவர்களின் போலித்தனமாகி விடுகின்றது.
எதிர் காலத்தில் சாதி பார்த்து திருமணம், கொழுத்த சீதனம் வாங்கிய திருமணம், எப்படி பணக் கட்டுகளை சம்பதிக்கலாம் என்ற எல்லக்குள் தான், இவர்களின் சிந்தனை எல்லையே சுருங்கிக் கிடக்கின்றது.
இவர்கள் கட்டும் படம்; எது? கறுப்புக் கண்ணடி, தலை முடியையும் தாடியையும் விதவிதமாக அழகுட்டுவது, இயல்பற்ற நாலு துல்லல், போலியான தீமிரான வாய் வீரம், பல்லைக்கட்டும் போலித்தனம் பாலியல் கவாச்சியை அழகுட்டிய பெண்ணும், நீலிக் கண்ணிர் வடிக்கும் சோகம், போலியான மனிதபிமான காட்சிகள், என்று அனைத்தையும் போலியாக உருவமைத்து காட்டுவது தான் படமாகின்றது. இந்த போலியான சமூக உணர்வு, அது சார்ந்த சிந்தனை உணர்வு என்ற எல்யைத்தாண்டி, எதுவும் இதில் கிடையாது. எல்லாம் போலி.
xgroup பதிவில் மிகவும் காரமாக விமர்சனத்தை முன்வைத்திருப்பதாகப் படுகிறது. குறித்த படைப்பாளிகள் இவ்விமர்சனத்தை ஆக்கபூர்வமாக அணுகாமல் போக இது வாய்ப்பளிக்கிறது. உண்மையில் குறித்த படைப்பில் தங்கள் திறமைகளை மாணவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியிருக்கலாமே என்றா ஆதங்கம் தான் எழுகிறது.
ஒருவகையில் பார்த்தால் அவரவர் தத்தமது அறிவு, சமூக மட்டங்களுக்கேற்பத் தங்களை வெளிக்காட்டுகிறார்கள். அந்தவகையில் பல்கலைக்கழகம் வரை சென்ற மாணவர்கள் இணைந்து இப்படியானதொரு படைப்பைத்தான் தர முடிகிறதென்றால் தமிழ்ச்சமூகத்தின் அறிவுமட்டம் எங்கே நிற்கிறதென்பதே புலனாகிறது.
எனக்குத் தெரிந்த அளவில் நூலகத் திட்டத்தில் பல கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் பங்களிக்கிறார்கள். அவ்வகையான மாணவர்களையும் பல்கலைக்கழகம் இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றதென்பது ஓர் ஆறுதல்.
படைப்பாளிகளிற்கு வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் பொன்னான உழைப்பை புல்லுக்கிறைக்காமல் நெல்லுக்கிறைக்கப் பாருங்கள். உங்கள் மீதான விமர்சனங்கள்தான் உங்களைப் புடம்போடும் என்பதை மறக்காமல் அவற்றை அணுகுங்கள். நீங்கள் சமூகத்துக்கு எதைக் கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்குக்கும் கிடைக்கிறது. நன்றி.
Trailor பார்த்தேன். கவலையாக இருந்தது. கொழும்பு பல்கலைக்கழகம் கேவலமான நிலைக்கு சென்றது என்னைப் போன்ற பழைய மாணவர்களுக்கு வருத்தம் அளிக்க கூடியது. உண்மையில் நான் படித்தது முகாமைத்துவ பீடத்தில். ஆயினும் அந்நேரத்தில் விஞ்ஞான பீட மாணவர்களே சமூக அக்கறையுள்ள மாணவர்களாக இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு பல நேரங்களில் வழிகாட்டியாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இந்நிலமைக்கு ஆளாகிவிட்டார்கள். விஞ்ஞான பீட மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
முகாமைத்துவபீட பழைய மாணவன்
/**இதுதான் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் மனநிலை. கலையையும் அரசியலையும் கலக்க வேண்டாம் என்கிறார்கள். இந்த திரைப்படத்தை கலை(!!?) வடிவம் எண்டு சொல்கிறார்கள் போலிருக்கு. எங்களை ஒண்டும் செய்யாமல் வாயை மூடட்டாம். விஞ்ஞான குஞ்சுகளின் அறிவு இவ்வளவு தான். பெரிய தமிழ்ப்படம் தயாரிச்சிட்டாங்கள் அதைப்ப் பாக்கட்டாம்.
Srilanka வில இருந்து நீலப்படம் தயாரியுங்கோ Srilanka வில இருந்து நீலப்படம் வந்திருக்கு எண்டு நாங்கள் எல்லாரும் வந்து பாக்கிறம்.
விளக்கம் குறைஞ்ச தம்பியவை போய் மண்டையை கழுவுங்கோடா..**/
You can say anything but when you try(atleast) to do something only you will feel the pain of that..!!
sum fucking idiot hav stated this
opoo charter ..........?
உவங்கள் எல்லாமே மண்டை வீங்கின கேசுகள் தான். ஒருத்தனுக்கும் ஒண்டும் தெரியாது. மெடிசின் படிக்கிறவனுக்கு அதை விட்டா வேற ஒண்டும் தெரியாது. ஏண்டா மெடிசின் செஞ்சா அவன் என்ன கொம்பா? அவனுக்கு சமூகத்தைப் பற்றி எல்லாம் தெரியுமா? அல்லது அக்கறை தான் இருக்கா? கூட சீதனம் வாங்குறது யார்? மணித்தியாலத்துக்கு ஏழை சனத்திட்டை காசு புடுங்குறது ஆர்? அவங்கள் தானே!
எக்ஸ் குருப், உங்கட மொரட்டுவ கம்பஸ் திறமோ? பெருசா கதைக்கிறியள்.. ஒவ்வொரு முறையும் மொரட்டுவ கம்பசில நடக்கிற ராக்கிங் பற்றி எழுதலாமே!! ராக்கிங்க அம்பலப்படுத்த வக்கில்லாத ஆக்கள் நீங்கள். அத விட்டுப் போட்டு மூளை இல்லாதவங்கள் படம் எடுத்துப் போட்டாங்கள் எண்டு கத்துறியள். முதல் உங்கட கம்பசின்ட கேவலத்தை பாருங்கோ. கிண்டினா நாறும். நீங்கள் ஆரெண்டு தெரியும் விரைவில எல்லாம் வெளில வரும்.
X-Group, நான் போட்ட பல பின்னூட்டங்களை நீங்கள் அனுமதிக்கவில்லை. நான் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் எனக்கு தெரிந்த விடயங்களைப் பின்னூட்டமாக இட்டேன். தனிப்பட்ட ரீதியில் அம்மாணவர்கள் எவ்வாறானவர்கள் என்பதை நான் சுட்டிக்காட்டியது தவறா? படத்தைக் காட்டி பணம் பறிக்கிறார்கள் என்று கூறியது தவறா? ஏன் எனது பின்னூட்டம் அனுமதிக்கப்படவில்லை.
மாணவன்
கொழும்பு பல்கலைக்கழகம்
x-group தொடக்கி வைத்திருக்கும் இந்த விவாதம் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது... குறித்த திரைப்படம் பற்றி இப்போது தான் முதற்றடவையாகக் கேள்விப்படுகிறேன்... எனவே இப்பதிவின் வழியான முற்சார்புகளோடு அதுபற்றிக் கருத்துக் கூறுவது சரியல்ல...
X-group பிடம் சில கேள்விகள்:
தன்னிலை மற்றும் தன்னுணர்வு சார் மனத்தகவமைப்புக்குப் புறம்பான அனைத்தையும் போகிறபோக்கில் கடிந்து விட்டும் நிராகரித்துவிட்டும் நழுவுவதற்கு மாற்றாக செயலூக்கமுள்ள வழிவகைகளை நாங்கள் கண்டாக வேண்டுமல்லவா?
"தென்னிந்திய சினிமா வின் நேரடியான தாக்கத்துக்கு உட்பட்ட கேவலமான சமூகக்குழு" என்ற முத்திரை குத்தலோடு பிரதானமாகக் குறித்த நபர்களை வெளியொதுக்கித் திருப்தி காண்பதை விடவும், இவ்வாறானவொரு மலினத் திரைப்பட உருவாக்கம், அதுவும் பல்கலைக்கழகம் போன்றவொரு அறிவுத்துறைத் தளத்திலிருந்து உருவாகியிருப்பதன், அது சமூக மக்கள் குழுமத்திடையே உண்டுபண்ணக்கூடிய உளவியற் பிரச்சனைப்பாடுகளின் பின்புலம் பற்றிய உரையாடலை நீங்கள் முதலிலேயே தொடங்கியிருக்கலாமே? இதுவொரு சமூகம்சார் பிரச்சனை என்பது தெளிவு. அப்படியிருக்க, முதலில் நீங்கள் மௌனத்தின் மூலம் இதைப் புறக்கணிக்க நினைத்ததேன்? இப்போது கிளம்பியிருக்கும் பதைபதைப்புக் குரலில் உண்மையான சமூக அக்கறை தெளிவாகவே தொனிக்கிற அதேநேரம் தனிநபர்ச் சீற்றத்தின் தடயங்களையும் தேடிப்பார்க்க மனம் தூண்டுப்படுகிறது......
தமிழில் தென்னிந்திய ஆண்முதன்மை மற்றும் மூன்றாந்தரப் பாலியல்மையச் சினமாவைத் தவிர்த்து மாற்றாகக் கருதக்கூடிய மாதிரிகள் உள்ளனவா (மிகச்சொற்பமான விதிவிலக்குகள் நீங்கலாக)? அதற்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளிகள் யாவை?
தென்னிந்திய மலின வணிக சினமாவின் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்ட எமது நோய்நிலையை விரிவாக அலச வேண்டியிருக்கிறது... பூகோளமயமாதலில் கடந்த ஒரு தசாப்த காலமாக மூன்றாம் உலக நாடுகள் சந்தித்து வரும் சிக்கற்பூர்வமான உளவியற் பிரச்ச்னைகளோடு இதையும் இடப்படுத்தி ஆராயவும் இடம் உள்ளது... இலகங்கைச் சூழமைவில் தமிழ்ச்சமூகத்தின் இடர்ப்பாடுகளோடு இதைப் பொருத்திப் பேச வேண்டிய தேவையை உணர்கிற அதே வேளை, அந்த ஒரு பரிமாணத்தோடு மாத்திரம் இதனைக் குறுக்கி விட முடியாது...
குறித்த மாணவர் குழாத்திடையே மனமாற்றத்தை உண்டு பண்ணி ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்குவதற்கு நீங்கள் இப்பதிவில் பிரயோகித்திருக்கும் மேலாண்மைத் தனமான மொழி எவ்விதத்திலும் உதவாது என்பதை திரைப்படத்தோடு தொடர்புபட்டவர்களாகக் கருதக்கூடியவர்கள் உங்களுக்கு மறுமொழி சொல்லியுள்ள விதம் புலப்படுத்துகிறது... இதை நீங்கள் ஏன் எண்ணிப்பார்க்கவில்லை?
மற்றது, முருகையனைப் புதுக்கவிதை முன்னோடி என்று தவறுதலாகக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்... முருகையன் யாப்புச் 'சுத்த'மான கவிதைகளையே எழுதியவர் மாத்திரமல்லாது கைலாசபதியோடு சேர்ந்து தமிழ்க்கவிப்புலத்துள் புதுக்கவிதையின் வரவைக் கடுமையாக எதிர்த்தவர் என்றும் படித்திருக்கிறேன்...
first we should appreciate them for their talents,
(they spend money, time..etc etc)..
Unfortunately all their efforts has been wasted as they didn't have any aim..
the above film is not needed in the situation we are living..
anyhow excuse the film and the film makers..
why don't you(we) all try to work on a good film, without wasting your precious time on commenting on this film....
X-Group, நான் போட்ட பின்னூட்டங்களை நீங்கள் மீண்டும் அனுமதிக்கவில்லை. இப்படத்துக்காக தமது பிரிவு மாணவர்களிடம் பலவந்தமாக காசு சேர்த்தது மற்றும் 250,000 என்று சொல்லப்பட்ட போதும் அதற்கும் குறைவான பணமே செலவாகியது. ஏற்கனவே பலரிடம் காசு சேர்க்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக இதன் தயாரிப்பாளர்கள் என்னென்ன திருவிளையாடல்கள் செய்தார்கள் என விபரமாகப் பின்னூட்டம் இட்டிருந்தேன். ஆனால் அதனை நீங்கள் பிரசுரிக்கவில்லை.
ஆனால் படத்தைத் தயாரிப்பவர்களின் கருத்துக்களை தவறாமல் அனுமதிக்கிறீர்கள். உங்களது நோக்கம் எமக்குப் புரிகின்றது. விமர்சிப்பதன் மூலம் இப்படத்தை பற்றி பேச வைப்பது தான் உங்களது நோக்கம்.
/first we should appreciate them for their talents,
(they spend money, time..etc etc)..
Unfortunately all their efforts has been wasted as they didn't have any aim..
the above film is not needed in the situation we are living..
anyhow excuse the film and the film makers..
why don't you(we) all try to work on a good film, without wasting your precious time on commenting on this film..../
தங்களது திறமையை மதிக்க வேண்டும் என கூறுகின்றார்கள். திறமை என்றால் என்ன? இவர்களது நேரத்தை செலவழிப்பது அவர்களது விடயம். தாங்கள் நேரத்தை செலவழித்தது பற்றி மற்றயவர்களுக்கு என்ன? மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக படிக்கும் இவர்கள் மக்கள் விரோத விடயங்களைப் படமாக்கினால் அவர்கள் கேள்வி கேட்காமல் வந்து முத்தமா தருவார்கள்?
X-Group, எனது இப்பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் என்பது எமக்கு தெரியும்.
மாணவன்
கொழும்பு பல்கலைக்கழகம்
dear x-group pals,
first you have to understand that this article is not gonna make much of an issue. because its well apparent that you are trying to do something for your own personal revenge.
its true that this film has not been up to the standards and it had a lot of south indian cinema's impact on it. but what i would say is commenting about it is easy. may be they have initiated the effort with a different aim and finally ended up with nothing.after all neither you nor others are perfect humanbeings.
if you wish to do something beneficial, go ahead and point out their mistakes to them at face and give them new and innovative ideas(if you are eligible for that!)without just sitting back and commenting about their work.
Anonymous frd
x-group,
எனது கருத்தை சொல்ல நீண்ட நாட்கள் எடுத்தற்கு மன்னிக்கவும் (தனிப்பட்ட பிரச்சனைகள்).
நான் எனது பதிவை எழுதியபோது அந்த படத்தை பார்த்திருக்கவில்லை (இப்ப பாத்திட்டன்). இருந்தாலும் முன்னோட்டத்திலேயே அவர்களது விடயதானம் புரிந்துவிட்டது. தென்னிந்திய தமிழ் சினிமாவை பார்ப்தை தவிர்த்து வருபன் நான் என்பதால் திரைப்படத்தில் இருக்கும் கதை தொடர்பாய் எனது அபிப்பிராயம் அவ்வளவு நல்லதல்ல.
இருந்தாலும் அவர்களது முயற்சி நிச்சயமாய் பாராட்டுக்குரியது. ஒரு திரைப்படத்தை முதலில் திரைப்படமாகவே விமர்சிக்கவேண்டும் (இல்லையா மயூரேசன்??) என்பது என் எண்ணம். பிறகுதான் மிச்சம். படத்தினை பார்த்த பொழுது எல்லாவற்றையும் தாண்டி என்னை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் போட்டாகிராபி என்பன ஈர்த்தன என்பது நிச்சயமான உண்மை.
உங்கள் விமர்சனம் முழுவதுமாக எதிர்மறையானதாகவே இருக்கின்றது. நிச்சயமாக (என்னைபொறுத்தவரையில்) அவர்கள் எடுத்துக்கொண்ட பாணி கரு என்பன ஆரோக்கியமானவையல்ல. அவர்களது தனித்துவத்தை மழுங்கடித்திருக்கின்றன. இருந்தாலும் அங்கே சில நல்ல விடயங்களும் இருக்கின்றன. அவற்றை பாராட்ட நீங்கள் தவறியிருக்கிறீர்கள். அப்படியான பாராட்டுகள் அவர்களை எங்கள் மண்சார் விடயங்களுக்குள் இழுத்து வரும்.
கடைசியாக ஒன்று மீளவும் என் பதிவை நன்றாக வாசியுங்கள். என் பதிவு சார்பான உங்கள் சொற்றொடர்கள் கடுமையாக இருக்கின்றன. இது என் பதிவை நீங்கள் விளங்கிக்கொள்ளா தன்மையை புலப்படுத்துகின்றது.
x-க்ரொஉப் நல்லதொரு வேலை செய்யுது. ஆனால் பின்னூட்டம் இடுபவர்களோட தொல்லை தாங்க முடியல. பொக்கட்டுகுள்ள 2 1/2 லட்சடத்தை கொண்டு திரியினம் நல்ல படம வந்தா குடுப்பம் எண்டு.படம் எடுத்தவன் அந்த காச எப்பிடியோ எடுப்பாந்தானே? படத்தில என்ன குறை நிறை எண்டு கதையுங்கோவன்.
x-க்ரொஉப் நல்லதொரு வேலை செய்யுது. ஆனால் பின்னூட்டம் இடுபவர்களோட தொல்லை தாங்க முடியல. பொக்கட்டுகுள்ள 2 1/2 லட்சடத்தை கொண்டு திரியினம் நல்ல படம வந்தா குடுப்பம் எண்டு.படம் எடுத்தவன் அந்த காச எப்பிடியோ எடுப்பாந்தானே? படத்தில என்ன குறை நிறை எண்டு கதையுங்கோவன்.
Post a Comment