Tuesday, October 16, 2007

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்

18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உலகெங்கும் கொடூரமான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர்.

பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெவ் (UNICEF) அமைப்பும்ம் இணைந்து 2007 இல் வெளியிட்டுள்ள "பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்" (Eliminating Violence against Children) என்ற கைநூலில் பிள்ளைகள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளித் தெரியவருகின்றது என்பது அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,

* 2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* அவர்களு் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; கிட்டத்தட்ட 75% ஆனோர் ஆண்கள்

* 80 முதல் 98 சதவீதக் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல்வீரிதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

* 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.

* குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்டரீதியான தண்டனையாக உள்ளது.

* உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல்ரீதியான தண்டனைகளிலிருந்து சட்டரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.

* ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.

* வார்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல்ரீதியாகவோ சொல்ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

* மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

* 2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

* 15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.

* இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர்.

* உலகில் 100 மில்லியன் முதல் 140 மில்லியன் சிறுமிகளும் பெண்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.

* சில நாடுகளின் சில பகுதிகளில் 71 முதல் 99 வீதமான சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்; சில சிறுமிகள் 4 வயதாகமுன்னரே பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.

* சகாராப் பிரதேச்ச்த்திலும், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளிலிம் ஆண்டுதோறும் 3 மில்லியன் சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* 2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

* 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

நன்றி:unicef.org

0 உரையாடல்: